திமுகவினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது அக்கட்சி தலைமைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கிய நிலையில், தற்போது அந்த வெற்றி காவல்துறையினரின் தூக்கத்தை கெடுத்துள்ளது, இரு அமைச்சர் ஆதரவாளர்கள் அல்லது மாவட்ட செயலாளர் ஆதரவாளர் என யார் தலைவர் துணை தலைவர் பதவியை கைப்பற்றுவது என மோதல் வெடித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் எம்.எல்.ஏ தனது மருமகள் காயத்ரி பிரபாகரனை சேர்மனாக்க முடிவு செய்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர்ஆனந்தின் ஆதரவாளர் பாரி என்பவர் தனது மனைவியான கவுன்சிலர் சங்கீதாவை சேர்மனாக்க வேண்டுமென ஆதரவு தேடினார்.இந்நிலையில் இரண்டு தரப்பிற்கும் இடையே நடந்த மோதல் அடிதடியில் முடிந்தது.
அதேபோல் இன்று மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைப்பெற்றது.ந்நிலையில் மறைமுக தேர்தலில் கலந்து கொள்வதற்காக மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்த கண்ணன் தரப்பினருக்கும், தயாளன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இருத்தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இருத்தரப்பினரையும் தடுத்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மறைமுக தேர்தலுக்கான கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நேரம் ஆகியும் பெரும்பாண்மைக்கான கவுன்சிலர்கள் வராததால் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.சரவணன் அறிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளரான கண்ணன் தரப்பினர், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க திருப்பத்தூர் மாவட்டம் நாற்றாம்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, திமுக வேட்பாளர் வென்மதி தனது ஆதரவாளர்களை காரில் ஏற்றி 50 பவுன்சர்கள் உதவியுடன் வாக்கு சாவடிக்கு அழைத்து வந்து மறைமுக வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார், இதில் விஷயம் என்னவென்றால் காவல்துறையை நம்பாமல் ஆளும் கட்சியினரே பாக்ஸர்களை அழைத்து வந்து தேர்தலை சந்தித்தது கடும் அதிர்ச்சியை ஆளும் கட்சிக்கு கொடுத்துள்ளது.
பொன்முடியை காட்டிலும் அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர் மரக்கானம் தேர்தலில் அதிக ஆதரவு கவுன்சிலர்களை வைத்து இருப்பது பொன்முடியெல்லாம் டூப்பு மஸ்தான் தான் டாப்பு என மஸ்தான் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர், வெற்றி பெற்றது என்னமோ திமுகதான் அதே போல் மோதி கொள்வதும் திமுகவினர் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் ஆளும் கட்சி தலைமையும், காவல்துறையும் விழி பிதுங்கி நிற்கிறது.