Cinema

பிரபல யூடியூபருக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து!....2K கிட்ஸ்சுக்கு ஷாக் கொடுத்த - ஆர்.டி.ஒ!

ttf vasan
ttf vasan

கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த டி.டி.எஃப். வாசன் 2020ம் ஆண்டு TTF என்ற பெயரில் யூடியூபில் சேனல்  ஓன்றை தொடங்கினர். ஆரம்பத்தில் யாரும் உறுதுணையாக இல்லையென்றாலும், நாளடைவில் பிரபலமாகி தற்போது இவர் தான் ட்ராவல் விளக்கர்ஸ் என்று முதலிடத்தில் உள்ளார். மில்லியன் கணக்கில் ப்ளோவெர்சை கொண்டுள்ளார் டி.டி.எஃப். சினிமா நடிகர்கள், நடிகைகளை மிஞ்சும் வகையில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.  2கே கிட்ஸ்சுக்கு பிடித்த இவர், கடந்த வருடம் இவரது பிறந்தநாள் விழாவில் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டு குறைவான ரசிகர்கள் தான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனால் நினைத்ததை விட பல்லாயிரம் ரசிகர்கள் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானது. 


இந்நிலையில் எந்த அளவிற்கு ரசிகர்களை உருவாக்கினாரோ, அதற்கு மாறாக தற்போது விமர்சகரை பெற்று வைத்திருக்கிறார். கடந்த வருடத்தில் இருந்து இவர் செய்யும் பைக் சாகசம் மற்றும் அதிவேகமாக பைக் ஓட்டுவது என்பது போன்ற காட்சிகள் யூடியூபில் வெளியிட்டதால் இவர்களது ரசிகர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் விதமாக இவர் செயல்படுகிறார் என்ற விமர்சனம் எழுந்தது. டி.டி.எஃப். வாசனின் வீடியோவை பார்த்து தான் இப்போ இருக்க கூடிய பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள் என அனைவரும் இவரது வீடியோவை பார்த்து அவர்களது பெற்றோர்களிடம் இருசக்கர வாகனத்தை கேட்டு விபரீதமான முடிவுகளை எடுத்துள்ளனர். 

நாளடைவில் டி.டி.எஃப். வாசன் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு புகார் பதிவானது. அந்த வழக்கின் ஒன்றாக சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தின் முன்பக்க சக்கரத்தை ஒட்டியபடியே தூக்க முயன்றுள்ளார். அந்த வகையில் அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கீலே விழுந்து விபத்துகுள்ளனார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  டி.டி.எஃப். வாசன், பாலுசெட்டி  போலீசார் விசாரித்து 5 வழக்குகள் பதிவிட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்திருந்தார். 

இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டு, காஞ்சிபுரம் ஆர்டிஓ உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று முதல் 2033 அக்டோபர் 5ம் தேதி வரை டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டிடிஎஃப் வாசனை போன்று பிற இளம்தலைமுறையினரும் ஆகிவிடக் கூடாது என்பதால் நடவடிக்கை எடுப்பட்டுள்ளது. டி.டி.எஃப். வாசன் மீது காஞ்சி மட்டுமன்றி சென்னையில் 8 வழக்குகளும், கோவை, நீலகிரியில் தலா ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இமாச்சலப்பிரதேசம் மணாலியிலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக டி.டி.எஃப். வாசன் மீது வழக்கு உள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்ட டி.டி.எஃ.ப். வாசனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு தொடர்ந்து சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.