தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து 34 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நிறைவடைந்தது பிறகு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் இருந்து நேராக கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார்.
அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது மு.க ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தொடர்ந்து தயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார், இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியாகிவந்தன, இதில் இன்னொரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வரை கட்சி சார்பில் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார் பிரசன்னா ஆனால் அவருக்கு சீட் கொடுத்தால் இந்து மத வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் மேலும் வீடியோ காட்சிகள் என பல காரணங்களை சுட்டிக்காட்டி தலைமை மறுத்து விட்டது, உதயநிதி ஸ்டாலின் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பிரசன்னா பேசியதும், கருணாநிதியை அப்பா என தெரிவித்து அளவிற்கு அதிகமாக பேசியதும் பிரசன்னாவிற்கு எதிர்ப்பை உண்டாக்கியது.
அத்துடன் விவாத நிகழ்ச்சி ஒன்றில் முக அழகிரி மற்றும் அவரது மகனை பிரசன்னா விமர்சனம் செய்ய கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த முக்கிய பெண் பிரமுகர், பிரசன்னாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என ஸ்டாலினிடம் நேரடியாக பேசியிருக்கிறார் இதையடுத்தே அரசியலில் மட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சரங்களிலும் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார் பிரசன்னா.
இந்த நிலையில் எப்படியாவது ஸ்டாலின் மனதில் இடம்பிடித்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீட் வாங்கிவிட முடிவு செய்து களத்தில் இறங்கி இருக்கிறார் பிரசன்னா அதற்காக இன்று எங்கெல்லாம் ஸ்டாலின் செல்வார் என்பதை முன் கூட்டியே அறிந்து கொண்டு அவரது கண்ணில் படுமாறு முக கவசத்தை விளக்கி விட்டு அனைத்து பற்கலும் தெரியும் படி சிரித்து ஸ்டாலினிடம் தனது இருப்பை பதிவு செய்துள்ளார்.
முதல்வராக பொறுப்பு ஏற்க ஸ்டாலின் தலைமை செயலகம் வரும் முன்பு முன்பே வந்து வாசலிலே நின்று மிகவும் பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டு பிரசன்னா நிற்க அவர் உடன் நின்ற திமுகவினரே பிரசன்னா நிலையை பார்த்தீர்களா என்று கிண்டல் செய்யும் நிலை வந்துள்ளது. ஸ்டாலின் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை என மனுஷ்ய புத்திரன் சோக கவிதை எழுதியது குறிப்பிடத்தக்கது.