Politics

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் வெளியான பரபரப்பு செய்தி !!

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் வெளியான பரபரப்பு செய்தி !!
தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் வெளியான பரபரப்பு செய்தி !!

தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ள நிலையில் யார் அடுத்த எதிர்க்கட்சி தலைவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் தனி பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் 125 இடங்களை கைப்பற்றி திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது திமுக.


அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இடம்பிடித்துள்ளது, இந்நிலையில் திமுகவின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார், அதிமுக சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு அதிமுகவின் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறு கிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக ஓபிஎஸ் அல்லது எடப்பாடி இருவரில்  யார் தேர்வு செய்ய போகிறார் என்று இன்று மாலை தெரிந்துவிடும், சட்டமன்ற பொது தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை முன் மொழிந்த ஓ பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி முன் மொழிய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பிலும், முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட எடப்பாடியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என எடப்பாடி தரப்பிலும் கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக வெற்றியை பெற்ற காரணத்தால் எடப்பாடி எதிர்க்கட்சி தலைவர் ஆகவேண்டும் என பன்னீர் செல்வத்திடம் சுட்டி காட்டி இருக்கிறார், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, அதற்கு ஓபிஎஸ் கொடுத்த பதிலில் தான் சர்ச்சையே தொடங்கியுள்ளது, தமிழகத்தில் என்ன நடக்கிறது என தெரியாமல் கூடவா நான் துணை முதல்வராக இருந்து இருக்கிறேன்.

எடப்பாடி தொகுதியில் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்ற பட்டது ஏன்? உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியை தொகுதியில் பாமகவிற்கு ஒதுக்கியது ஏன் என எனக்கு தெரியாதா? 10.5% இட ஒதுக்கீடு, அமமுக பிளவு, தேவேந்திர குல வேளாளர் அரசாணை என அனைத்தும் தென் மாவட்டங்களில் கட்சியை பாதிக்கும் என நான் பலமுறை சொல்லியும் கேட்காமல் சட்டத்தை நிறைவேற்றுயது ஏன்?

ஆண்டிபட்டியில் போட்டியிட இருந்த தங்கதமிழ் செல்வனை போடி தொகுதியில் போட்டியிட சொல்லி அதற்கு எங்கிருந்து நிதி வந்தது என கூட அறியாதவனா நான் என வெளுத்து எடுத்து இருக்கிறார், நான் பலமுறை கட்சியின் நலன் கருதி விட்டு கொடுத்துவிட்டேன், ஒரு முறை எடப்பாடி விட்டு கொடுப்பதால் ஒன்றும் ஆகிவிடாது, கொங்குமண்டலத்தில் வெற்றியை எடப்பாடி பெற்றார் என்றால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்ற ஒரே தொகுதி தேனி மட்டும் தான் அப்போது எங்கு சென்றார்கள் சதவிகத கணக்கு போடுபவர்கள் என மறு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக எடப்பாடி பழனிசாமியை சமாதான படுத்தும் முயற்சியில் ஒரு தரப்பு இறங்கியுள்ளதாம்.. எடப்பாடி அல்லது ஓபிஎஸ் இருவரில் யார் எதிர்க்கட்சி தலைவராக வர போகிறார்கள் என்பது இருவரில் ஒருவர் விட்டு கொடுப்பதில் தான் இருக்கிறது என தற்போதைய நிலவரங்கள் தெரிவிக்கின்றன.