திமுகவில் செய்தி தொடர்பு பிரிவின் மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள பிரசன்னா சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கறிஞரான தமிழன் பிரசன்னாவின் மனைவி 35 வயதான நதியா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
பிரசன்னாவின் மனைவி நதியாவிற்கு இன்று பிறந்த நாள் என்றும் பிரசன்னா பிறந்தநாள் அன்று கூட வீட்டிற்கு வரவில்லை எனவும், அவர் வேறொரு வீட்டில் இருந்த காரணத்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாகவும், அதன் அடிப்படையில் அவர் தூக்கில் தொங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் அவர் தூக்கில் தொங்கினாரா? அல்லது கொலை செய்து தற்கொலை போன்று நாடகம் ஆடுகிறாரா பிரசன்னா என்ற கேள்வியும் எழுந்துள்ளது, மேலும் பிரசன்னா நேற்று இரவு யாருடன் தங்கி இருந்தார் என்ற தகவல் கிடைத்தால் பிரசன்னா மனைவி நதியா இறந்ததற்கான முழு காரணம் தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரசன்னா மனைவி மர்ம மரணம் குறித்து தமிழக காவல்துறை விசாரணை நடத்தினால் முழுமையான நம்பக தன்மை இருக்காது எனவும் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் மனைவியின் மரணத்திற்கான காரணம் என்ன என தெளிவாக தெரியும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரில் #justicefornathiya என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகிவருகிறது, விரைவில் பிரசன்னாவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் பிரசன்னாவிற்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கூடாது என கூறப்படுகிறது.
பிரதமர் மோடியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கயிறு இங்கே மோடியின் கழுத்து எங்கே என கேள்வி எழுப்பி இருந்தார் பிரசன்னா தற்போது அவரது மனைவியே தூக்கில் தொங்கிய நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை பிரசன்னா மனைவியை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறாரா? என்ற சந்தேகம் அதிகரித்து வருகிறது என இணையத்தில் பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.