திரைப்படத்தில் பொது மக்களுக்கு தொந்தரவு செய்யும் ரவுடிகளை வேட்டையாடி மக்களுக்கு சுதந்திரம் பெற்று கொடுப்பது நாயகர்கள் வேலை இதைத்தான் தமிழ் சினிமாவில் காலம் காலமாக திரைப்படமாக எடுத்து வருகின்றனர், அந்த வகையில் நடிகர் விஜய் பல படங்களில் ரவுடிகளிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றும் காட்சிகளில் நடித்து இருக்கிறார்.
நடிகர்கள் திரையில் ஒரு மாதிரியும் உண்மையான வாழ்க்கையில் ஒரு மாதிரியும் இருப்பார்கள் என்ற விமர்சனங்கள் காலம் காலமாக இருந்து வரும் சூழலில் அதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யபட்டு இருக்கும் சம்பவம்.
சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிசம் அதிகரித்து வருவதாக கிரைம் ரிப்போர்ட் எகிற என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை நியமிக்கப்பட்டார் இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவர் என்கவுண்டர் செய்யபட்டனர், இந்த நிலையில் படப்பை குணா என்ற ரவுடி கொலை கொள்ளை வியாபாரிகளை மிரட்டி பணம் பரிக்கிறான் என்ற தகவல் கிடைக்க அவனை தேடி களம் இறங்கியது வெள்ளதுரை டீம் மேலும் அவனின் கூட்டாளியான காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தென்னரசு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அரசு ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் தென்னரசு, போந்தூர் சிவாவுக்கு மிகவும் நெருக்கமானவர். போந்தூர் சிவா படப்பைகுமாருக்கு வலது கரமாக செயல்பட்டு வந்தவர். படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளின் அண்ணன் திருநாவுக்கரசு என்பதையும் இந்த வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திரையில் ரவுடிகளை ஒழித்து கட்டும் போலீஸ், மாவட்ட ஆட்சியர் வழக்கறிஞர் என பல வேடங்களை ஏற்று நடித்த விஜய் ஒரு ரவுடியை மக்கள் இயக்க மாவட்ட தலைவராக பதவி கொடுத்து அழகு பார்த்து இருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, திரையில் கதாநாயகன் செயலில் ஈடுபடுவோர் நிஜ வாழ்க்கையில் ரவுடிகளை தங்கள் துணைக்கு வைத்து கொள்வது இது போன்ற சம்பவங்கள் மூலம் வெளிவந்துள்ளது.
விரைவில் கைது செய்யப்பட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் தென்னரசுவை பொறுப்பில் இருந்து விஜய் நீக்குவாரா? இல்லை வேடிக்கை பார்ப்பாரா என்ற கேள்விக்கு என்ன பதில் கிடைக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.