இன்று சிபிஐ மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதும் இரண்டு நாட்களுக்கு முன்னர் அண்ணாமலை செய்த செயலுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிபிஐ மற்றும் சிவிவி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-
நல்ல ஆட்சி, மக்கள் சார்பு செயலில் உள்ள ஆட்சி ஊழலை ஒழிக்க தொடர் முயற்சி செய்து வருகிறேன். தேச நலனை மனதில் கொண்டு அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வேண்டும். இடைத்தரகர்களுக்கு இடம் கொடுக்க கூடாது. ஊழல்வாதிகளை பிடிப்பது முக்கியம் என்றாலும் ஊழல் நடக்கும் முன்பே தடுப்பது அதைவிட முக்கியம்.தேச நலனை மனதில் கொண்டு அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
நாட்டில் அதிகரித்து வரும் ஊழலை சரிபார்க்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் இடைத்தரகர்கள் இல்லாமல் கூட அரசு திட்டங்களின் நன்மைகள் பெற முடியும் என்று இன்று நாடு நம்புகிறது.ஊழல் அமைப்பின் ஒரு பகுதி என்று புதிய இந்தியா நம்பத் தயாராக இல்லை. இது வெளிப்படையான அமைப்பு, திறமையான செயல்முறை, மென்மையான நிர்வாகம் ஆகியவற்றை தான் விரும்புகிறது என குறிப்பிட்டார் பிரதமர்.
இந்த சூழலில் இரு நாட்களுக்கு முன்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை தமிழக மின் வாரியத்தில் ஊழல் நடைபெற இருப்பதாகவும் அமைச்சர் ஒருவர் தலைமையில் கம்பெனி ஒன்றை வாங்கி அதற்கு டெண்டர் கொடுக்க இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார் ஒப்பந்தம் என்ற பெயரில் கையெழுத்து நடந்தால் அதனை வெளிப்படுத்துவோம் என தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து அந்த செயலை குறிப்பிட்ட சிலர் நிறுத்தியதாக கோட்டை வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்த சூழலில் ஊழல் நடைபெறும் முன்னரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் தடுத்துவிட்டார் என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்,
குறிப்பாக இன்று பிரதமர் சிபிஐ மாநாட்டில் ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதை காட்டலும் ஊழல் நடைபெறும் முன்னரே தடுக்க வேண்டும் என பேசியிருந்தார்.
அதையே அண்ணாமலை செய்ததாகவும் மோடி சொல்கிறார் அண்ணாமலை செய்கிறார் என பாஜகவினர் குறிப்பிட்டு வருகின்றனர்.