தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மின் வாரியத்தில் நடைபெறும் முறைகேடு குறித்து பேசியது கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் தற்போது செந்தில் பாலாஜி அண்ணாமலை இடையே நடைபெற்ற இரு வேறு வாக்கு வாதங்கள் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளன.
இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தமிழக மின் துறையில் மிக பெரிய ஊழல் நடைபெற பேச்சு வார்த்தை நடப்பதாகவும், அதற்கு ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் பேரம் பேசி வருவதாகவும் தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் தகவல்களை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரம் குறிப்பிட வெறும் 2 மணி நேரத்திற்குள் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் மின்வாரியத்தில் நடைபெறும் சில தகவல்களை குறிப்பிட்டு ட்விட் செய்தார் இதற்கு சொல்லப்பட்ட தகவல்கள் தவறு என விளக்கம் அளித்தார் பாலாஜி, மேலும் அண்ணாமலை குறித்து விமர்சனமும் செய்தார்.
இந்த சூழலில்தான் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ கடும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது, தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின், முன்னால் அதிமுக அமைச்சரும் தற்போதைய திமுக சிட்டிங் திமுக அமைச்சருமான செந்தில் பாலாஜி குறித்து பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. அதில் செந்தில் பாலாஜியை கிழித்து தொங்க விடுகிறார் ஸ்டாலின் முழுவதும் ஊழல் என பட்டியல் வாசிக்கிறார்.
இந்த வீடியோ காட்சியை பகிர்ந்த அண்ணாமலை அண்ணா உங்கள் சொந்த கட்சியை சேர்ந்த தலைவரே உங்களை பற்றி பேசி இருக்கிறார் இதற்கு பதில் சொல்லுங்கள் என கேட்க ஆடி போய்விட்டது செந்தில் பாலாஜி தரப்பு.. தற்போது இதற்கு என்ன பதில் தருவது என தெரியாமல் ஆடிப்போயுள்ளது அமைச்சர் தரப்பு, மீண்டும் ஒருமுறை மலை அண்ணாமலை என நிரூபித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. ஸ்டாலின் கடுமையாக பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.