Technology

பிரதமர் "மோடியின்".. புரட்சி திட்டம் நீங்கள் பதிவு செய்து விட்டீர்களா?

modi
modi

பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், செல்வமகள் திட்டம், மேக் இன் இந்தியா திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் போன்றவை மக்களுக்கு நல்ல பலனை கொடுத்துவரும் நிலையில் கொரோனா கால சுகாதார நிலை உலக மக்களை கடும் பாதிப்பில் கொண்டு சென்றது.


இந்த சூழலில்தான் பிரதமர் டிஜிட்டல் சுகாதார திட்டத்தை அறிமுக படுத்தினார், இதன் மூலம் ஒருவரது மருத்துவ குறிப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் சேமிக்க படுவதுடன் குறிப்பாக போலி மருத்துவர்களை கண்டறிய பெரிதும் துணை புரியும் என்கின்றனர் வல்லுநர்கள் இதன் 

டிஜிட்டல் சுகாதார அட்டையில் மிகப் பெரிய நன்மை என்னவென்றால், இதுவரை தனியொரு மருத்துவமனையில் அல்லது மருத்துவமனைக் குழுவில் மட்டுமே பதிவுசெய்யப்பட்ட பயனாளியின் சுகாதாரத் தகவல்களை இனிமேல் நாட்டின் எல்லா மருத்துவக் கட்டமைப்புகளிலும் ஒரே நேரத்தில் பகிர்ந்துகொள்ள முடியும். பயனாளி முதல்முறையாக அதைப் பயன்படுத்திய பிறகு, மறுமுறை அதே மருத்துவரிடம் வந்தாலும், வேறு மருத்துவரிடம் சென்றாலும், முந்தைய சிகிச்சைகள், மருந்துச் சீட்டுகள் மற்றும் சோதனை விவரங்களை அவருடன் எடுத்துச் செல்லத் தேவையில்லை.

இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்குச் சிகிச்சைக்குச் சென்றாலும், பயனாளியின் கடந்த கால சுகாதாரத் தகவல்களை இந்தத் தனித்துவமான அட்டை மூலம் தெரிந்துகொண்டு சிகிச்சை அளிப்பது எளிதாகும். மேலும், மருத்துவ ஆவணம் தொலைந்துவிட்டால் கவலையில்லை. பழைய சோதனை அறிக்கைகள் இல்லையென்றால், எல்லாச் சோதனைகளையும் மறுபடியும் மேற்கொள்ள வேண்டியதில்லை.

பிற நோயாளிகளின் ஒப்புதலுடன் பயனாளிக்குத் தெரிந்த ஒருவரின் உடல்நலப் பதிவுகளையும் அவருடைய அட்டையில் நிர்வகிக்கலாம். இது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும். காகிதத் தேவையைக் குறைக்கும். கோப்புகள் வைக்கும் இடம் சுருங்கிவிடும். போலி மருத்துவர்களை இனம்கண்டுவிடும். எதிர்காலத்தில் பொதுச் சுகாதார முன்னேற்றத்துக்குத் தேவையான முன்திட்ட வரைவைத் தயாரித்து, நிதி ஒதுக்கீடு செய்வதும் அத்திட்டத்தைச் செயல்படுத்துவதும் மேம்படும்.

இந்த திட்டத்தில் அனைவரும் உடனடியாக பதிவு செய்து உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பதிவு செய்யும்படி பல மருத்துவர்கள் தற்போது பிரச்சாரம் துவங்கியுள்ளனர், எதிர்காலத்தில் மருத்துவ உதவிகள் இந்த டிஜிட்டல் சுகாதார அட்டை மூலம் கிடைக்கும் என்று கணக்கிடுவதால் இப்போதே பதிவு செய்வது நல்லது... உங்கள் டிஜிட்டல் சுகாதார அட்டையை பதிவு செய்ய இந்த லிங்கில் சென்று பதிவு செய்யவும். 

https://healthid.ndhm.gov.in/register