Tamilnadu

புதுக்கோட்டையில் கடும் பரபரப்பு இந்து அமைப்புகள் போராட்டத்தில் அதிரடி திருப்பம்!

Pudukottai Hindu organizations
Pudukottai Hindu organizations

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத மாற்றம் செய்ய ஊருக்குள் புகுந்த நபர்களை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் விரட்டி அடித்தார், இந்த சூழலில் அவர்கள் கொடுத்த போலியான புகாரில் கைது செய்யப்பட்ட  விடுதலை செய்ய கோரியும், மத மாற்ற அமைப்புகளுக்கு துணை போயி போலியான வழக்கில் கைது செய்த காவல்துறை ஆய்வாளரை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவில் அமைந்திருக்கிறது திம்மியம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி, ஒரு கும்பல் பிரசாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கணேஷ் பிரபு, மத மாற்ற கும்பலை கண்டித்திருக்கிறார்.

உடனே, அக்கும்பல் கணேஷ் பிரபு மீது போலீஸில் பொய்யான புகார் ஒன்றை கொடுத்திருக்கிறது. போலீஸாரும் என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலேயே கணேஷ் பிரபு மீது பொய்யான வழக்கை பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இதை கண்டித்து, திம்மியம்பட்டி கிராம மக்கள் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர் மேலும், போலீஸாரின் இச்செயலை கண்டித்து இன்று (ஜன. 30) மாலை 3 மணியளவில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

தொடக்கத்தில் மொத்தம் 10 நபர்களுக்கு உள்ளாக வருவார்கள் என எதிர்பார்த்த காவல்துறைக்கு அதிர்ச்சியே கிடைத்தது, ஒரு கிராமமே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்ததால் போலீசார் சற்று அதிர்ந்து போகினர், நேரம் அதிகரிக்க அதிகரிக்க கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது, இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் ஊருக்குள். அத்துமீறி நுழைந்து மத பிரச்சாரம் செய்த நபர்களை கைது செய்யவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குரல் எழுப்பினர், இதையடுத்து காவல்துறை அவர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது, இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கைது செய்து மண்டபத்தில் தங்கவைத்த காவல்துறை அவர்களை விடுதலை செய்தது.

தென் மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையில் இந்து அமைப்புகள் மற்றும் கிராமமக்கள் குவிந்த விவகாரத்தில் அதிர்ந்து போயிருக்கிறது ஊருக்குள் மதமாற்றம் செய்ய சென்ற கும்பல்.