Tamilnadu

சவுக்கு சங்கர் புகார்..?பாஜக சவுதாமணி மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு அப்படி என்ன இருக்கிறது இந்த வீடியோவில்?

savuthamani and savuku shankar
savuthamani and savuku shankar

பாஜக பெண் பிரமுகர் சவுதாமணி மீது தமிழக காவல்துறை இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது, குறிப்பாக கோவில்களை இடிக்கும் திமுக அரசு நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ஏன் குறிப்பிட்ட சர்ச்சை இடிக்கவில்லை என ஒருவர் பேசிய வீடியோவை பகிர்ந்து இருந்தார்.


இது குறித்து சவுக்கு சங்கர் என்பவர் ட்விட்டரில் தமிழக காவல்துறையை டேக் செய்து புகார் கூறியிருந்தார், இந்த சூழலில் இன்று சவுதாமணி மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது, சவுதா மணி மீது புகார் அளித்த சவுக்கு சங்கர் மீது பல்வேறு புகார்கள் இருக்கின்றன, ஆனால் அந்த நபர் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

உண்மையை பகிர்ந்த காரணத்திற்காக சவுதாமணி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை தொடர்ந்து பாஜகவினரை அச்சுருத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது, உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு எதிராக கோவில் இடிப்பு சம்பவங்கள் மிக பெரிய அளவில் பின்னடைவை சந்திக்கும் என்பதால் அதை சுட்டிக்காட்டிய சவுதாமணி மீது ஆளும் அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் இடிக்கப்படும் கோவில்கள் குறித்து செய்தி பதிவிடும் பலர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து இருப்பது கடும் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது, இரு தினங்களுக்கு முன்னர் பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ்.பி.செல்வம் மீது வழக்கு பதிவு செய்தது தமிழக காவல்துறை தற்போது கோவில்கள் இடிப்பு குறித்து வீடியோ பகிர்ந்த சவுதாமணி மீது வழக்கு பதிவு செய்து இருப்பது காவல்துறை அணுகுமுறை மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே திமுக அரசின் கை பாவையாக தமிழக காவல்துறை செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்த சூழலில் தற்போது பாஜகவினர் மீது அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்வது பாஜக குற்றச்சாட்டினை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பாஜகவினரை கைது செய்வதில் தீவிரம் காட்டும் காவல்துறை மாநகராட்சி பொறியாளர் மற்றும் பணியாளர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சங்கரை இது வரை வழக்கு பதிவு செய்து கைது செய்யாதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.