தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா மகனிற்கு எழுந்து நின்று ஸ்பெஷல் மரியாதை செலுத்தியது, கோபேக் அமிட்ஷா என மூச்சு முட்ட முட்ட தொண்டை தண்ணீர் வற்ற வற்ற சமூக வலைத்தளத்தில் பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் பெரியாரிஸ்ட்கள் உடன்பிறப்புகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐ.பி.எல் 14-வது சீசனில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு க சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின், சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷ் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பிதார் . அதனைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு 7 ம் எண் பொறித்த ஜெர்சியை தோனி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய தோனி, சென்னை அணி தனக்கு நிறையக் கற்றுக் கொடுத்துள்ளதாகக் கூறினார். மாற்று அணி வீரர்களையும் சென்னை ரசிகர்கள் உற்சாகப்படுத்துவார்கள் எனத் தெரிவித்த அவர், தனது கடைசிப்போட்டி சென்னையில் தான் எனக் குறிப்பிட்டார்.அடுத்ததாக சிறப்புரையாற்றிய உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தான் மட்டுமல்லாது தனது குடும்பமே தோனியின் ரசிகர்கள் தான் எனத் தெரிவித்தார். தமிழர்கள் பச்சைத் தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர் எனவும் கூறினார். இப்படி பஞ்ச் வசனம் பேசியபோது சில்லறையை சிதரவிட்ட திமுகவினர் மற்றும் பாஜக எதிர்ப்பாளர்கள்.
முதல்வர் ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமிட்ஷா மகனிற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியது கடும் புகைச்சலை உண்டாக்கியுள்ளது, அரசு முறை பயணமாக சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை, ஓபிஎஸ் அரசு நிகழ்ச்சி ஒன்றில் குனிந்து நின்று வணங்கியதை கிண்டல் செய்த பலரும் இப்போது அமிட்ஷா மகனிற்கே எழுந்து நின்று ஸ்பெஷல் மரியாதை கொடுத்த முதல்வரை விமர்சனம் செய்ய முடியாமல் முடங்கியுள்ளனர்.
எப்போதும் முதல்வர் தும்மினாலும் இது திராவிடத்திற்கு கிடைத்த வெற்றி என அறிக்கை கொடுக்கும் வீரமணி, சுபவீ இந்த சம்பவம் குறித்து என்ன சொல்ல போகிறார்கள் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.