Cinema

போடு போட்டு தாக்கு இந்த அடி இவருக்கு தானா..... இவர்கள் தான் அந்த குறை பிரசவ கூட்டமா?

Sivakumar family and bhakiyaraj
Sivakumar family and bhakiyaraj

தமிழக திரை துறையினர் தெரிவிக்கும் சாதாரண கருத்துக்கள் கூட மக்கள் மன்றத்தில் மிக பெரிய விவாத பொருளை உண்டாக்கி விடுகிறது, அந்த வகையில் இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கர் உடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் முன்னுரை எழுதிய காரணத்திற்காக விமர்சனம் செய்யப்பட்டார்.


இளையராஜாவை விமர்சனம் செய்வதை ஆதரித்து ஒரு தரப்பும் எதிர்த்து ஒரு தரப்பும் என விமர்சனம் அதிகரித்து வருகிறது, இந்த சூழலில் இயக்குனர் பாக்யராஜ் இன்று காலை பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என குறிப்பிட்டார், இது இணையத்தில் வைரலானது.

இந்த சூழலில் நான் குறை பிரசவம் என குறிப்பிட்டது மாற்று திறனாளிகளை இல்லை எனவும் அவ்வாறு மாற்று திறனாளிகள் மனது புண்பட்டு இருந்தால் அந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்பதாக பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார், அதாவது குறை பிரசவம் என்று குறிப்பிட்ட வார்த்தைக்கு மட்டுமே மன்னிப்பு கேட்டாரே தவிர, பிரதமர் மோடி குறித்த தனது கருத்தை பாக்கியராஜ் மாற்றி கொள்ளவில்லை.



இந்த சூழலில் பாக்யராஜ் பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என குறிப்பிட்ட கருத்திற்கு பின்னால் நடிகர் சிவகுமார் குடும்பம் இருப்பதாக கூறப்படுகிறது, அதாவது நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் அணி மற்றும் விஷால் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன.



இதில் சிவகுமாரின் இரண்டாவது மகன் கார்த்தி, நேரடியாக பல இடங்களில் பாக்யராஜ் கருத்திற்கு எதிர் கருத்து தெரிவித்ததோடு இல்லாமல், சிவகுமாரும் பல இடங்களில் பாக்யராஜ் தரப்பிற்கு எதிராக செயல்பட்டதாக கூறப்படுகிறது, இந்த சூழலில்தான் சிவகுமார் குடும்பத்தில், சிவகுமார் தொடங்கி, சூர்யா, கார்த்தி, ஜோதிகா என பலரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மத்திய அரசை விமர்சனம் செய்து வந்துள்ளனர்.

நடிகர் சிவகுமார் ஒரு படி மேலே சென்று இஸ்ரோ ராக்கெட் விடும் திட்டத்தை விமர்சனம் செய்து இருந்தார், இவர்களை போன்றவர்களை தான் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. மொத்தத்தில் தமிழ் சினிமா பிரதமர் ஆதரவு, பிரதமர் எதிர்ப்பு என்ற கருத்தை மையமாக கொண்டு சுழல தொடங்கியுள்ளது.