தமிழகத்தில் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவரான AR. ரஹ்மான், ஆஸ்கார் விருது மூலம் மேலும் பிரபலமடைந்தார் அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் இசை அமைப்பதை காட்டிலும், இந்தி, வெளிநாட்டை சேர்ந்த திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இசை அமைப்பதை ரஹ்மான் செய்து வந்தார்.
தற்போது இந்தியில் மார்க்கெட் இல்லாத காரணத்தால் மீண்டும் ரஹ்மான் தமிழ் திரைப்படங்களுக்கு இசை அமைக்க தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது, ரஹ்மான் இசை அமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ரஹ்மான் GST வழக்கு குறித்த விசாரணை வந்ததால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான், தனது இசை படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கவில்லை என்று கூறி ரூ.6 கோடியே 79 லட்சம் சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி., ஆணையர் கடந்த 2019-ம் ஆண்டு ரஹ்மானுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் , ஏ.ஆர்.ரகுமான் வழக்கு தொடர்ந்தார். அதில், ''இசைப் படைப்புகளின் காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள்தயாரிப்பாளர்கள்தான்எனவும் இதற்காக என்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும்
என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும், ரூ.6 கோடியே 79 லட்சம் வரி செலுத்தவில்லை என கூறி, அதே தொகையை அபராதமாகவும் விதித்துள்ளார்'' இது எந்த வகையில் நியாயம் உடனடியாக இந்த நோட்டிசிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ரஹ்மான் நீதி மன்றத்தில் முறையிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் ஜி.எஸ்.டி. ஆணையரின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த முறை உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் பதில் மனு தாக்கல் என்பதை காட்டிலும் பதிலடியாக இருந்தது என்றே கூறவேண்டும் .
GST ஆணையர் கூறியதாவது ரஹ்மான் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில், அவரது புகழுக்கு களங்கப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை.
ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே சேவை வரி நிர்ணயித்துள்ளது. மேலும் பல்வேறு ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன சேவை வரியை செலுத்தாததால் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
ரஹ்மான் தரப்பில் தயாரிப்பாளர்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், விசாரணையின்போது அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தபோது இசை குறிப்புகளை மட்டும் ஏ.ஆர்.ரகுமான் வழங்கவில்லை. அவர் இசையமைத்து, பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசை கருவி கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களின் சேவைகளை பயன்படுத்தி அவர் பாடல்களை பதிவு செய்துள்ளார் ஆனால் பல இடங்களில் இசை குறிப்புகளை ரஹ்மான் தயாரிப்பாளர் தரப்பிடம் வழங்கவில்லை.
எனவே, இந்த சேவை வரி அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை வரி நோட்டீசை எதிர்த்து, ஜி.எஸ்.டி., கவுன்சிலில் மேல்முறையீடு செய்து ரஹ்மான் தீர்வு காணலாம். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்.இவ்வாறு ஆணையர் தரப்பில் பதில் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார், இந்த செய்தி வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் ரஹ்மானை விமர்சனம் செய்து வருகின்றனர், தமிழனங்கே என்று கார்ட்டூன் வெளியிட தெரிந்த ரஹ்மானுக்கு இசை குறிப்பை தன் வசம் வைத்து கொண்டால் வரி செலுத்த வேண்டும் என்பது தெரியாதா என பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறும் ரஹ்மான் தற்போது தனது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக நீதிமன்ற படி ஏறி இருப்பதும் GST ஆணையர் பதிலடி கொடுத்து இருப்பதும் தற்போது விவாத பொருளாக மாறி இருக்கிறது. AR ரஹ்மான் இசை அமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் நேரத்திலா இப்படி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போட்ட வழக்கு விசாரணைக்கு வரவேண்டும் என புலம்பி வருகின்றனர் பொன்னியின் செல்வன் தரப்பினர்.