ஒரு வார்த்தை மாற்றத்தால் சொந்த கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமியை பாஜகவிற்கு அடிபணிந்து விட்டார் என்ற புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் பிரியாணி புகழ் ஜோதிமணி அக்கா.
இன்று ஜோதிமணி அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி பாஜகவிற்கு முற்றிலுமாக அடிபணிந்துவிட்டார். சபாநாயகர் பதவியை பாஜகவிற்கு விட்டு கொடுத்திருப்பதன் மூலம் தனது ஆட்சிக்கான முடிவுரையை அவரே எழுதிக்கொண்டுவிட்டார். இவர்கள் கையில் சிக்கியிருக்கும் புதுச்சேரி மக்களை நினைத்தால் கவலையாக உள்ளது..என பதிவிட்டார்.
இதனை பார்த்த பலரும் தற்போதைய புதுவை முதல்வர் பெயர் ரெங்கசாமி, நாராயணசாமி இல்லை என ஜோதிமணிக்கு அறிவுரை கூற தொடங்கினர் இன்னும் ஒருசிலரோ, அண்டை மாநில முதல்வர் பெயரை கூட சரியாக எழுத முடியவில்லை இந்த லட்சணத்தில், ராகுல்காந்தியை அழைத்து வந்து காளான் பிரியாணி செய்ய கற்று கொடுத்துள்ளார் ஜோதிமணி என விளாசி வருகின்றனர்.
நெட்டிசன்கள் கிண்டல் செய்வதை தொடர்ந்து நாராயணசாமி என்பதற்கு பதிலாக ரங்கசாமி என எடிட் செய்துவிட்டார் ஜோதிமணி இருப்பினும் நெட்டிசன்கள் விடுவதாக இல்லை, தமிழகத்தில் திமுகவிடம் காங்கிரஸ் கட்சியை அடகுவைத்து தின்று வருகிறீர்கள் நீங்கள் பாஜகவை விமர்சனம் செய்வது அறிவருப்பாக இல்லையா முதலில் உங்கள் கட்சியை பாருங்கள் என விளாசி வருகின்றனர்.
ராகுலை அழைத்து வந்து காளான் பிரியாணி போட்டு பிரபலமடைய கணக்கு போட்ட ஜோதிமணி தற்போது ரங்கசாமி விஷயத்தில் தப்பு கணக்கு போட்டுவிட்டார்.