Politics

ராஜாபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெற்றி பெறுவாரா வெளியானது கருத்து கணிப்பு!!!

ராஜாபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெற்றி பெறுவாரா வெளியானது கருத்து கணிப்பு!!!
ராஜாபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெற்றி பெறுவாரா வெளியானது கருத்து கணிப்பு!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள இந்த சூழலில் பல நிறுவனங்கள் முக்கிய தொகுதிகள் பலவற்றில் கருத்து கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியின் கள நிலவரம் வெளியாகியுள்ளது .


இராஜபாளையம் தொகுதியில் திமுக சார்பில் தங்கபாண்டியன் என்பவரும் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் போட்டியிட்டுக்கின்றன, இது குறித்து ரைடன் மற்றும் 24 Airads நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகளை 24AIRADS நிறுவனம் வெளியிட்டுள்ளது அதன்படி திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிடுவது அக்கட்சிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

திமுகவினர் ஒற்றுமையாக களப்பணி மேற்கொள்ளாதது, சென்ற முறை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகிய காரணங்கள் திமுகவிற்கு எதிராக உள்ளது, அதிமுகவை பொறுத்தவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவது மிகவும் வலுவாக மாறியுள்ளது, ராஜபாளையம் நகரத்தில் அதிமுகவிற்கான வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

கிராமம் கிராமமாக ஊர் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஆட்களை நியமித்தது, அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான நபராக அவர் மீதான பார்வை ஆகிய காரணங்கள் அமைச்சருக்கு பிளஸ் பாய்ண்டாக அமைந்துள்ளன, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 44% ஆதரவும் திமுக வேட்பாளர் சிட்டிங் MLA தங்கபாண்டியனுக்கு 36 % ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.

இதன் மூலம் 8 % வாக்கு வித்தியாசத்தில்  ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கேடி ராஜேந்திர பாலாஜி வெற்றி பெறுவார் என சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. களத்தில் திமுக அதிமுக இடையே சம போட்டி நிலவுவதும் நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி, அமமுக ஆதரவு என திமுக பக்கம் செல்ல கூடிய வாக்குகள் பிரிவதும்.,

ராஜபாளையத்தில் தங்கபாண்டியன் சமூகத்தை தவிர்த்து மற்ற சமூக வாக்குகள் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக மாறுவதும் ராஜபாளையம் தொகுதியில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்துள்ளதாக 24AIRADS நிறுவனம் தெரிவித்துள்ளது.