Politics

தலை கீழாக மாறிப்போன ஆயிரம் விளக்கு கள நிலவரம் குஷ்பூ வெற்றி பெறுவாரா வெளியானது சர்வே முடிவுகள்!!!

தலை கீழாக மாறிப்போன ஆயிரம் விளக்கு கள நிலவரம் குஷ்பூ வெற்றி பெறுவாரா வெளியானது சர்வே முடிவுகள்!!!
தலை கீழாக மாறிப்போன ஆயிரம் விளக்கு கள நிலவரம் குஷ்பூ வெற்றி பெறுவாரா வெளியானது சர்வே முடிவுகள்!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகர் குஷ்பூ. தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்


இதனைத் தொடாந்து கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்த அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், குஷ்பூ போட்டியிடுவதால் ஆயிரம் விளக்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது, முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் குஷ்பூ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் ரைடன் நிறுவனம் 24AIRADS நிறுவனத்துடன் இணைந்து கருத்து கணிப்பு ஒன்றினை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது அதன் படி ஆயிரம் விளக்கு தொகுதி குறித்து அந்நிறுவனம் அளித்த சர்வே முடிவுகள் பின்வருமாறு, திமுகவின் பலமான தொகுதியாக காணப்படும் தொகுதியில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே எடுத்த சர்வே முடிவில்...

திமுகவிற்கு ஆதரவாக 49 % பேர் ஆதரவு தெரிவித்தனர், அதே நிலையில் சிட்டிங் MLA குக செல்வம் பாஜகவில் இணைந்ததால் அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் இறக்கப்பட்டால் உங்கள் வாக்கு அவருக்கு கிடைக்குமா என்ற கேள்விக்கு 30 % பேர் ஆதரவு தெரிவித்தனர், இந்த நிலையில் இந்த தொகுதியில் திமுக சார்பில் எழிலன் என்பவரும் பாஜக சார்பில் குஷ்பூவும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியான பின்பு கருத்து கணிப்பு நடத்தியுள்ளனர்.

அதில் திமுக வேட்பாளருக்கு 35% ஆதரவும் குஷ்பூவிற்கு 33% ஆதரவும் கிடைத்துள்ளது, குக செல்வம் திமுக நபராக அறியப்பட்டவர் என்பதால் அதிமுக வாக்கு அவருக்கு செல்வது கடினமாக இருந்ததாகவும், தற்போது குஷ்பூ பாஜக சார்பில் போட்டியிடுவதால் கள நிலவரம் மாறியுள்ளது மேலும் எழிலன் என்பவருக்கு திமுக சீட் கொடுத்தது அக்கட்சியில் இரு பிரிவை உண்டாகியுள்ளது எனவும்.

இதன் அடிப்படையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வாக்கு சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வருவதுடன் பாஜக வேட்பாளர் குஷ்பூவிற்கான வாக்கு விகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறது எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.14 வருட அரசியல் வாழ்வில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் குஷ்பூ வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக முதல்கட்ட கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.