ராஜேந்திர பாலாஜி சொன்னது நடந்துவிட்டது...! ஒரே வாரத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்ராஜேந்திர பாலாஜி சொன்னது நடந்துவிட்டது...! ஒரே வாரத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்
ராஜேந்திர பாலாஜி சொன்னது நடந்துவிட்டது...! ஒரே வாரத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்

தமிழக அரசியல் களம் இறுதி கட்ட பரப்புரையை நெருங்கி சென்றுகொண்டு இருக்கிறது தேர்தலுக்கு 10 நாட்களுக்கு குறைவாக இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் ராஜபாளையன் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்துள்ளதுடன் நச்சத்திர தொகுதியாகவும் இராஜபாளையம் தொகுதி மாறியுள்ளது, இந்நிலையில் இந்த தொகுதியில் கடந்த ஒரு வாரங்களில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் ராஜபாளையம் தொகுதியில் கடந்த முறை திமுக வெற்றி பெற்றது, அதற்கு கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட ஷ்யாம் என்பவருக்கு எதிராக சில சமூகங்கள் திரும்பியதும், பல ஆண்டுகள் அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியாக இருந்த சில சமூக வாக்குகள் பிரிந்ததும் காரணம் என தெரியவந்தது, இந்நிலையில் அதே ஷ்யாம் என்ற நபர் இப்போது திமுகவில் இணைந்து இருப்பது அதிமுகவிற்கு சாதகமாகவும் திமுகவிற்கு எதிராகவும் திரும்பியுள்ளது.

மேலும் கடந்த ஒரு வாரமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருவதுடன் கிராமம் கிராமமாக சென்று அனைத்து சமூக மக்களையும் நேரடியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார், அவர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையை கேட்டு கொண்டதுடன் உடனே நிறைவேற்றியும் வருகிறார், இது இதுநாள் வரை திமுகவிற்கு பக்க பலமாக இருந்த நபர்களையும் அதிமுக பக்கம் திருப்பியுள்ளது.

மேலும் முகவூர், தளவாய்புரம், செட்டியார்பட்டி ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்துவேன் என அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் அந்த பகுதி மக்களை கவர்ந்துள்ளது, மேலும் சிட்டிங் எம்எல்ஏ ராஜபாண்டியன் மீதான அதிருப்தி தொகுதியில் அதிகமாக நிலவுவது கள நிலவரங்களில் எதிரொலிக்கின்றன..

இவற்றை வைத்து பார்க்கையில் வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக வேட்பாளராக களமிறங்கி இருக்கும் ராஜேந்திர பாலாஜி குறைத்தது 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது, ராஜபாளையம் எனது சொந்தகார தொகுதி குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரங்களில் சொல்லிவந்தது இறுதியில் நடந்தே விட்டது

Share at :

Recent posts

View all posts

Reach out