Politics

கோவை தெற்கில் வெற்றி பெற போவது யார்? முடிவுகளை சரியாக கணிக்கும் நிறுவனத்தின் கருத்து கணிப்பு வெளியானது!!!

கோவை தெற்கில் வெற்றி பெற போவது யார்? முடிவுகளை சரியாக கணிக்கும் நிறுவனத்தின் கருத்து கணிப்பு வெளியானது!!!
கோவை தெற்கில் வெற்றி பெற போவது யார்? முடிவுகளை சரியாக கணிக்கும் நிறுவனத்தின் கருத்து கணிப்பு வெளியானது!!!

கோயம்புத்தூர் மேற்கு தொகுதியாக இருந்த கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த தொகுதிகள் மறுசீரமைப்பில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியாக மாறியது. மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சி.அரங்கநாயகம், திமுக முன்னாள் எம்.பி. மு.ராமநாதன் உள்ளிட்ட பிரபலங்கள் வெற்றி பெற்ற தொகுதி. முழுக்க முழுக்க மாநகரப் பகுதிகளை கொண்ட இந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு 2 தேர்தல்களை சந்தித்துள்ளது.


கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் அம்மன் கே.அர்ச்சுணன் 17,419 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவின் அம்மன் அர்ச்சுணன் 59,788 வாக்குகளையும், காங்கிரஸ் கட்சியின் மயூரா எஸ்.ஜெயக்குமார் 42,369 வாக்குகளையும், பாஜகவின் வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளையும் பெற்றனர்.

இந்த முறை அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவிற்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது, இத்தொகுதியில் திமுக-அதிமுக நேரடியாக மோதவில்லை. காங்கிரஸின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி அப்துல்வகாப், அமமுகவின் அமைப்புச் செயலாளர் சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி ஆகியோர் இங்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்.

இதுகுறித்து 24Airads மற்றும் ரைடன் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது இவர்களில் போட்டி என்பது பாஜக காங்கிரஸ் மக்கள் நீதிமய்யம் ஆகிய மூவருக்கும் இடையே அமைந்துள்ளது, பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி என்ற முகமும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்ற முகமும் வானதிக்கு உள்ளது எனவும் அதே நேரத்தில் சிட்டிங் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் ஆதரவாளர்கள் முறையாக பணி செய்யவில்லை எனவும் அதிமுக கூட்டணி வாக்குகள் முறையாக பாஜகவிற்கு செல்லவில்லை என்பது எதிராக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

கமல் ஹாசன் போட்டியிடுவதால் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் பிரிந்து மக்கள் நீதி மையத்திற்கு செல்லும் என்றும் இதனால் இந்த இடம் பாஜக காங்கிரஸ் மக்கள்  நீதிமய்யம் என சம அளவில்போட்டிகள் உள்ள தொகுதிகளில் ஒன்றாக இருக்கிறது இருப்பினும்..,

பாஜக அதிமுக கூட்டணியின் வாக்கு வங்கி பாஜகவிற்கு முறையாக கடைசி நேரங்களில் சென்றால் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெறுவார் எனவும், கமல் ஹாசன், மயூரா ஜெயக்குமார் என இருவரும் பாஜகவிற்கு எதிரான வாக்குகளை பிரிப்பதால் பாஜகவிற்கு சாதகமான தொகுதிகளில் ஒன்றாக இந்த தொகுதி மாறியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.