
திரௌபதி எனும் புதிய முறை திரைக்கதை மூலம் புகழ்பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. 2016-ம் ஆண்டு ஆண்டு இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த மோகன் ஜி முதன் முதலில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கினார்.
அந்த படம் வெற்றி படமாக அமையவில்லை ஆனால் கடந்த 2020 ஆண்டு திரௌபதி என்ற படத்தை எடுத்திருந்தார். படத்தில் அஜித் மச்சான் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், திரௌபதி படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது அதே நேரத்தில் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றது
குறிப்பிட்ட சமுதாய மக்களை உயர்த்தியும் ஒரு தரப்பை விமர்சனம் செய்தும் மோகன் ஜி படத்தை எடுத்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மோகனுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
படம் முழுக்க முழுக்க பெண்களை ஏமாற்றும் நாடக காதலுக்கு எதிரானது எனவும் இதில் எந்த சாதிய சாயமும் இல்லை எனவும் மோகன் விளக்கம் அளித்தார்.படத்தை ஒரு தரப்பினர் எதிர்த்தாலும் மற்றொரு தரப்பினர் திரௌபதி படத்திற்கு ஆதரவாக திரையரங்கில் குவிந்தனர்.
இந்த திரௌபதி படத்தின் மூலம் மோகன் ஜி அடைந்த பிரபலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததே! அதன் பிறகு மோகன் ஜி சமீபத்தில் 'திரௌபதி ‘ என்னும் பெயரிலான பதிப்பகம் ஒன்றையும் தொடங்கியிருந்தார் இது ஒருபுறம் என்றால் அடுத்தது ருத்ர தாண்டவம் திரைப்படம் வெளியானது அதில் கெளதம் வாசுதேவ் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ரிச்சி ரிச்சர்ட் மெயின் ரோல் செய்து இருந்தார்.
அந்த படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது இந்த சூழலில் இன்று மோகன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதில்.,
எனது அடுத்த திரைப்படம் பற்றிய ஒரு அறிவிப்பு இன்று மாலை 06:40 மணிக்கு.. என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி” என குறிப்பிட்டுள்ளார் இந்த படம் ஜெய்பீம் திரைப்படத்தில் சொல்லப்பட்ட தவறான கருத்துக்களுக்கு பதிலடி தரும் வகையில் அமையும் என்றும் போலியாக சொல்லப்பட்ட பல தகவல்கள் குறித்து முழுமையான பதிலடி தரும் வகையில் அமையும் என்றும் கூறப்படுகிறது.