கர்நாடகத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன்கள் விஜயேந்திரா, ராகவேந்திரா ஆகியோரின் உதவியாளரான உமேசின் வீடு, அலுவலகங்கள் உள்பட 50 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.
இது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் எடியூரப்பாவுக்கும் இது நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால் எடியூரப்பா அதுபற்றி கவலைப்படாமல் சிகாரிப்புராவில் உள்ள தனது வீட்டின் அருகே காரில் அமர்ந்தபடி அதில் இருக்கும் டி.வி. மூலம் நேற்று முன்தினம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு- டெல்லி அணிகள் விளையாடிய போட்டியை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.
தனது உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது பற்றி கவலைப்படாமல் அவர் கிரிக்கெட் போட்டி பார்த்து ரசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு நெருக்கமான இடங்களில் ரைடு நடந்து இருப்பது மத்திய பாஜக விற்கு நெருக்கமான இடத்தில் எடியூரப்பா இல்லை அல்லது மாநிலத்தில் மீண்டும் தனி கட்சி தொடங்க எடியூரப்பாவின் மகன்கள் முயன்று வரலாம் என்று கூறப்படுகிறது, சில நாட்களுக்கு முன்னர் மோடியின் பெயரை மட்டுமே கொண்டு சென்று தேர்தலில் வெற்றி பெற முடியாது என எடியூரப்பா பேசியது குறிப்பிடத்தக்கது.