Tamilnadu

#BREAKING அமைச்சர் சேகர் பாபுவிற்கு டெமோ காட்டிய பாஜகவினர் காவல்துறை குவிப்பு !

kanniyakumari
kanniyakumari

திமுக பாஜக இடையே கடந்த சில நாட்களாக மறைமுகமாக நடந்துவந்த அரசியல் சதுரங்க ஆட்டம் தற்போது நேரடியாக களத்திற்கு வந்துள்ளது, கடந்த சில நாட்களுக்கு முன்னர்  ஒன்றல்ல 1000 பேர் வந்தாலும் இந்த அரசை அசைத்து பார்க்க முடியாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பாஜகவிற்கு பதில் கொடுத்து இருந்தார்.


இந்த சூழலில் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் பாஜகவினர் என்ன நடக்கும் என டெமோ காட்டியுள்ளனர் தெருவிற்கு தெரு முதல்வர் ஸ்டாலினின் உருவ பொம்மை எரிக்கப்பட்டு வருகிறது, காவல்துறை குவிக்கப்பட்ட நிலையிலும் காவல்துறை எண்ணிக்கையை காட்டிலும் பாஜகவினர் அதிக அளவில் குவிந்து வருவதால் என்ன செய்வது என தெரியாமல் காவல்துறையினர் விழி பிதுங்கி வருகின்றனர்.

பாஜக நிர்வாகி பாஸ்கரன் மீது தாக்குதல் நடத்திய திமுக MP மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நேற்றைய தினம் நெல்லை பாரதியார் சிலை அருகே முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார், இதையடுத்து அவரை கைது செய்தது காவல்துறை.

காவல்துறையின் பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து கன்னியாகுமரி நெல்லை இன்னும் பிற தென் மாவட்டங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் உருவ பொம்மை எரிக்கப்பட்டு வருகிறது, இதை தடுக்க காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பலன் அளிக்கவில்லை, மேலும் பாஜகவினரின் புகாரை ஏற்று திமுக MP அவரது இரு மகன்கள் உள்ளிட்ட பலரின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 10 நாட்களில் கோவிலை திறக்கவில்லை என்றால் நிச்சயம் உள்ளே நுழைவோம் அதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார், திமுகவினரை எதிர்க்க 1000 பேர் தேவையில்லை எங்கள் கட்சியை சேர்ந்த 100 பூத் ஏஜெண்டுகள் போதும் எனவும் இப்போதே மூன்று நாட்கள் முடிவடைந்து விட்டன, கோவில் திறக்கவில்லை என்றால் ஸ்தம்பிக்க வைப்பது உறுதி எனவும் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.

அதற்கு டெமோ காட்டுவது போல் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சியால் கன்னியாகுமரி மாவட்டமே ஸ்தம்பித்து இருப்பது அமைச்சர் சேகர் பாபாவுவிற்கு கொடுத்த டெமோ காட்சியாகவே பார்க்க படுகிறது. டெமோவே இப்படி என்றால் கோவிலை தமிழக அரசு திறக்கவில்லை என்றால் என்ன நடக்குமோ? வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்.