சமூக வலைத்தளங்களில் தவறான வகையில் வீடியோ வெளியிட்டு மக்களை பிரச்னையில் ஆழ்த்தி வந்த சூர்யா என்ற சுப்பு லட்சுமியை குண்டர் சட்டத்தில் சிறையில் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் பெண்களை ஆபாசமாகவும், இழிவாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட 'ரவுடி பேபி' சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார்.மதுரை மாவட்டம், திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி எனும், ரவுடி பேபி சூர்யா, 35.
இவர், சமூக வலைதளங்களில், வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.ஆபாசமாக பேசியும், இழிவாகவும் சித்தரித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இவர் மீது கோவையை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த டிச., 31ல் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.விசாரித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, எஸ்.பி., பரிந்துரைப்படி கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு சிறையில் இருக்கும் சூர்யாவிடம் வழங்கப்பட்டது.
சூர்யா தனக்கு எதிராக புகார் கொடுப்பவர்களை எனக்கு தென் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய அமைச்சரை தெரியும் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என மிரட்டல் விடுத்து வந்ததாகவும் அது போலி என தெரியவந்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே குண்டர் சட்டத்தில் சூர்யாவை கைது செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
More Watch videos