Tamilnadu

இந்த மூன்று "விஷயம்" தான் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த முக்கிய காரணம் !

Ukraine and russia
Ukraine and russia

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்திவரும் சூழலில் ஏன் ரஷ்யா இந்த நிலைக்கு சென்றது என்பது குறித்து ஸ்டான்லி ராஜன் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம். 1917வரை ரஷ்யா தனிநாடு ஆனால் உக்ரைனின் சில பகுதிகள் அவர்களிடம் இருந்தன , மகா பீட்டர் எனும் ரஷ்ய மன்னனின் காலத்தில் ரஷ்யா பலமானபொழுது அது நடந்தது, ரஷ்யமொழி பேசும் மக்கள் ஏராளம் உக்ரைனில் உண்டு.


இந்தியாவில் பஞ்சாப் போல உக்ரைன் வளமான பகுதி, உண்மையில் ரஷ்யபுரட்சிக்கான அடிதளம் அங்குதான் தொடங்கிற்று, ஹிட்லர் காலத்துக்கு முன்பே ஜார் மன்னன் அங்குதான் யூதர்களை நொறுக்கி கொண்டிருந்தான், செல்லும் இடமெல்லாம் மன்னர்கள் இருப்பதும் அவர்களிடம் அதிகாரம் இருப்பதையும் உணர்ந்த யூத இனம் அரசர்களை ஒழிக்க ஒரு சித்தாந்தம் உருவாக்கிற்று அதுதான் கம்யூனிசம்.

அப்படிபட்ட உக்ரைன் 1919ல் சோவியத்தில் இணைந்தது சோவியத்தின் கூட்டு பண்ணையும் இதர கூட்டுறவு சங்கங்களும் அங்குதான் பரிசீலிக்கபட்டன, ரஷ்யாவின் மிக முக்கிய உணவு உற்பத்தி மையமாகவும் அணு ஆய்வு கூடமாகவும் அதுதான் விளங்கிற்று, செர்னோபில் பின் சோவியத் நொறுங்கிவிட உக்ரைன் 1990ல் பிரிந்தது , அது பெரும் குழப்பத்தை கொடுத்தது ரஷ்யா ஏக சிக்கலில் விழுந்தது ஐரோப்பாவுக்கே போட்ட உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் அமெரிக்கா கோதுமை அனுப்பும் அளவு பொருளாதாரம் வீழ்ந்தது.

உக்ரைன் மிகபெரியவீழ்ச்சியினை ரஷ்யா போல சந்தித்தது, செர்னோபில் வெடிப்பு தாக்கிய சோகமே தீரா நிலையில் சோவியத் உடைந்தது பெரிய அடியானது, அந்த குழப்பமான காலகட்டத்தில்தான் உக்ரைனில் இருந்த சோவியத் கால தொழில்நுட்பம் பலற்றை சீனா தூக்கி சென்றது உக்ரைன் பெண்கள் உலகெல்லாம் செய்ய கூடாத தொழில்களை செய்யுமளவு பொருளாதாரம் மோசமானது.

கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு மாற தெரியாமல் ரஷ்யா குழம்பி நின்ற காலங்களில் உக்ரைனும் குழம்பி நின்றது, பொதுவாக ஐரோப்பாவில் கிழக்கு ஐரோப்பா நாடுகள் வறுமையானவை அவை உக்ரைனையும் பாதித்தது, இந்நிலையில்தான் மேற்கு நாடுகளுடனும் சீனாவுடனும் அதன் உறவு மெல்ல துளிரிவிட்டது, பல பிடுங்கிய பாம்பு, கால் உடைபட்ட சிங்கம் என ரஷ்யாவும் வீழ்ந்து கிடந்தது அதுவரை சிக்கல் இல்லை.

புட்டீனின் எழுச்சி உக்ரைன் சிக்கலுக்கு முதல்படி, புட்டீன் முதலில் ரஷ்யாவில் அமெரிக்கா உருவாக்கி வைத்த "சமூக நீதி ஆர்வலர்கள்" "ஜனநாயக காவலர்கள்" சமூக போராளிகள்" என எல்லோரையும் முதலில் தூக்கி நாட்டை அமைதியாக்கினார்.

ஒரு முன்னாள் உளவாளியாக அவருக்கு அமெரிக்காவின் ஆட்டமெல்லாம் அத்துபடி என்பதால் எளிதாக நாட்டை தன் கட்டுபாட்டுக்கு கொண்டுவந்து சீர்படுத்தினார், ரஷ்யாவின் மிகபெரிய பலமான எண்ணெயினை சரியான முறையில் காசாக்கினார், ரஷ்ய எண்ணெய் பாய பாய அமெரிக்க கம்பெனிகள் அடிவாங்கின, இதுதான் இன்றைய போருக்கு முதல்படி.

அமெரிக்காவின் முதல் திட்டம் ரஷ்யாவின் அண்டை நாடுகளான தஜிகிஸ்தான் துர்க்மெனிஸ்தானில் எரிவாயு நிரம்ப உண்டு, அதை ஆப்கன் ஊடாக பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு குழாய் பதித்து கொண்டுவந்து அள்ளி செல்ல வேண்டும்.

அதைத்தான் ஆப்கானிஸ்தானில் செய்ய கால்பதித்தது அமெரிக்கா, பின்லேடனெல்லாம் ஒரு பூச்சாண்டி அவ்வளவுதான், ஆனால் செய்யமுடியா அளவு ஆப்கானிய தாலிபன் அட்டகாசம் இருந்தது அதையும் தாண்டி புட்டீன் முன்னாள் சோவியத் நாடுகளை எச்சரித்து கட்டுபடுத்தினார்., அமெரிக்கா ரஷ்யாவினை கோபபார்வை பார்த்த முதல் இடம் இதுதான்.

இந்த மோதலின் அடுத்த இடம் சிரியா, அங்கே அமெரிக்கா கால்பதித்து அங்கிருந்து ஈராக் எண்ணை இன்னும் பல நாடுகளின் எண்ணையினை குழாய் மூலமாக துருக்கி ஊடாக ஐரோப்பாவுக்கு கொண்டு செல்ல வந்தது, சதாம், லிபியா போல சிரிய அதிபரும் குறிவைக்கபட அங்கு ஆபத்பாந்தவனாக வந்தார் புட்டீன், ரஷ்ய ராணுவம் தலையிட்டதில் அமெரிக்காவின் கனவு தகர்ந்து அந்த எண்ணெய் பிசினஸும் கைவிடபட்டது.

போதாகுறைக்கு இன்னும் எண்ணெய் உற்பத்தி நாடான லிபியா, வெனிசுலாவிலெலாம் அமெரிக்கா உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு போட்டியாக ரஷ்ய வாடகை ராணுவம் சென்றது,ரஷ்ய வாடகை ராணுவத்தின் முதலாளி யாரென்றால் சாட்சாத் புட்டீனேதான்.

இனி புட்டீனை சரிக்காமல் தங்கள் வியாபாரம் இல்லை என்பதை உணர்ந்த அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள் அமெரிக்க அதிபரிடம் கண்ணை கசக்கின, டிரம்பரோ சீனாவினை மட்டும் கையில் கல்லோடு சுற்றி சுற்றி வந்ததால் இதில் அதிக கவனம் செலுத்தவில்லை அமெரிக்க கனடா எண்ணெயினை எடுங்கள் என சொல்லிவிட்டு அவர்போக்கில் இருந்தார்.

பிடன் ரஷ்யாவினை குறிவைத்தார், காரணம் 2014ல் ரஷ்யா உக்ரைனின் கிரிமியாவினை பிடித்தபொழுது துணை அதிபராக இருந்தவர் பிடன், கிரிமியா ரஷ்யாவோடு இணைய பிடனின் சொதப்பலிலும் பங்கு உண்டு அந்த வெறியிலும் எண்ணெய் சந்தையினை ரஷ்யாவிடம் இருந்து தட்டி பறிப்பதிலும் ஆரம்பத்தில் இருந்தே குறியாய் இருந்தார் பிடன்.

அவர் வந்தவுடனே அரேபியாவில் இருந்து வெளியேறினார், ஈரானை பெரிதும் கண்டுகொள்ளவில்லை மாறாக தளர்வுகளை கொடுக்க விரும்பினார்,இது ஏன் என எல்லோரும் கேட்டதற்கான காரணத்துக்கு அன்று அவர் பதில் சொல்லவில்லை என்றாலும் இன்று ரஷ்யா எண்ணெய் முடக்கபட்டால் அரேபிய எண்ணெயும் எரிவாயுவும் தாராளமாக புழங்க வேண்டும் என்ற பதில் கிடைத்திருப்பதை உலகம் உணர்கின்றது.

அந்த பிடன் ரஷ்யாவினை முடக்கவும் ஒரு பொருளாதார தடை இடவும் காரணம் தேடினார், காரணம் கிடைக்கா பட்சத்தில் அதை உருவாக்க முயன்றார் தனியாக ரஷ்யாவினை எதிர்க்காமல் நேட்டோவினை இழுத்தார், நேட்டோ என்பது ஒரு காலத்தில் சோவியத் யூனியன் ஐரோப்பிய நாடு எதையாவது தாக்கினால் மொத்த ஐரோப்பாவும் சோவியத்தை தாக்க வேண்டும் என உருவான ஒப்பந்தம், இன்றும் அது வலுவாக உண்டு.

ரஷ்யா பலம்பெறும்பொழுதெல்லாம் உக்ரைன் அதன் வளத்துக்காக தாக்கபடும் என்பது தியரி, ஆண்டாண்டு காலமாய் அதுதான் நடந்தது, புட்டீன் பலமானவுடன் அதுதான் உக்ரைன் பகுதியான கிரிமியாவில் நடந்தது, கிரிமியாவினை தன்னோடு ரஷ்யா 2014ல் இணைத்தது உலகில் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை ஆனால் கிரிமியா இன்றும் உக்ரைன் பகுதி என்றுதான் ஐநா சொல்கின்றது.

இப்பொழுது ரஷ்யாவினை முடக்க காரணம் தேடிய அமெரிக்கா மெல்ல மெல்ல ரஷ்யாவின் அண்டை நாடுகளில் கால் வைத்து ஏவுகனைகள் ரேடார்கள் என பொருத்தியது போலந்த் ரொமேனியா என இது நடந்தது அவை எல்லாம் நேட்டோ நாடுகள் என்பதால் ரஷ்யா எச்சரிக்கையோடு நிறுத்தியது.

அப்படியே உக்ரைனிலும் அமெரிக்காவும் நேட்டோவும் கால் வைக்கும் பொழுது சிக்கல் வெடித்தது, ரஷ்யா இங்கே குறுக்கே வந்து 1990ல் சோவியத் உடைந்த பின் 1997ல் மின்ஸ்க் நகர் ஒப்பந்தபடி முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோ சேர்க்காது என முன்பு அமெரிக்காவும் ரஷ்யாவும் செயத ஒப்பந்தத்தை காட்டினார். 

ஆனால் அது பழைய காலமென்றும் இப்பொழுது முடிவெடுக்கும் உரிமை உக்ரைனுக்கும் உண்டு என வாதிட்டது அமெரிக்கா, உக்ரைன் தனிநாடாக இருந்தால்தானே ஒப்பந்தம் செய்யவருவீர்கள் என்றார் புட்டீன் விஷயம் வலுத்து இழுத்தது, சுமார் 8 மாதமாகவே இரு பக்கமும் தயாரானார்கள்,

ரஷ்யா உலகிலே சக்திவாய்ந்த குண்டு முதல் அதிநவீன ஹைப்பர்சோனி ஏவுகனை, எஸ் 550 தடுப்பு என வானின் செயற்கை கோளையே அடிக்கும் சாதனம் செய்தது எல்லாம் போருக்கான அறிகுறிகளாயின‌,அதே நேரம் அமெரிக்கா எப்படியெல்லாம் பொருளாதார தடையினை வீசலாம் என திட்டமிட்டது.நேற்று உலகம் எதிர்பார்த்தபடி யுத்தம் வெடித்தது , ரஷ்யா உக்ரைன் முழுக்க கைபற்றி கொண்டிருக்கின்றது

அமெரிக்காவோ தன் வலையில் ரஷ்யா விழுந்ததை அடுத்து பொருளாதார தடைகளை அறிவிக்க தொடங்கியுள்ளது இதனால் இனி அமெரிக்காவுக்கு என்ன லாபம் என்றால் பலத்த லாபங்கள். முதலாவது ரஷ்ய எண்ணெய் சந்தை கைபற்றபடும் இரண்டாவது ரஷ்ய அச்சுறுத்தல் உள்ள நாடுகளுக்கு உக்ரைனை காட்டி ஆயுதம் விற்கலாம் 

மூன்றாவது கடும் தடை மூலம் ரஷ்யாவினை 1990ன் வறுமை நிலைக்கு கொண்டு செல்வது, இப்படி பலத்த அனுகூலத்தினை எதிர்பார்த்து அமெரிக்கா காய்நகர்த்துகின்றது, அதே நேரம் எல்லா தடையும் போட்டாயிற்று இனி என்ன அடித்து பார்த்துவிடுவோம் என ரஷ்யா இன்னும் பல நாடுகளை தன்னோடு இணைக்கலாம் அல்லது வடகொரியா போன்ற நாடுகளை இணைக்கலாம்.

நிச்சயம் யுத்தத்தின் முழு சவாலும் அதன் விளையும் ரஷ்யாவினைத்தான் தாக்கும், ரஷ்யா இதை உலகபோராக மாற்றுமா இல்லை உக்ரைனோடு நிறுத்திவிட்டு பொருளாதார தடைகளை சமாளிக்குமா என்பது இனிதான் தெரியும், போர் என சொல்லிவிடலாம், செய்தி நிறுவணங்கள் அதில் காசு பார்க்கலாம் ஆனால் போரின் கொடுமை கொஞ்சமல்ல‌.

இப்பொழுது மூன்று பக்கமும் ரஷ்ய படைகள் சூழ்ந்த நிலையில் மேற்கு எல்லை மட்டுமே திறந்துள்ளது அங்கு உக்ரைன் அகதிகள் லட்சகணக்காக குவிகின்றனர், ஏற்கனவே கடும் அகதி சிக்கலில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் அகதிகளை நோக்கி முகம் சுழிக்கின்றன‌.

ஐரோப்பா இந்த 50 ஆண்டுகளில் அமைதியாக இருக்கலாம் அதற்கு காரணம் 1945ல் அவர்கள் கண்ட பெரும் யத்ததம், உண்மையில் இது அவர்களின் களைப்பு மிகுந்து ஓய்வான காலம் மற்றபடி எப்பொழுதும் தீராபோர்களில்தான் காலம் தள்ளினார்கள், உண்மையான கிறிஸ்தவமோ அன்போ சகோதரத்துவமோ அவர்களிடமில்லை.

தாங்கள் வாழ எந்த கொடிய எல்லைக்கும் செல்லும் தர்மம் அவர்களுடையது அதையும் கிறிஸ்துவத்தால் மாற்றமுடியவில்லை, கிறிஸ்து பெயரைசொல்லி கொண்டே யாரையாவது அழித்து தங்கள் வாழ்வினை வளபடுத்துவது அவர்களுக்கு குற்றமே இல்லை என மனநிலை செல்லும் அளவு மறத்துவிட்டது.

உக்ரைன் ரஷ்யா மோதல் சொல்லும்  வரலாறும் அரசியலும் வியாபாரமும் ஏராளம் அப்படியே மதமாற்ற கும்பலிடம் இருந்து தேசாபிமானிகளும் இந்துமக்களும் எவ்வளவு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதும் அதில்தான் அடங்கி இருக்கின்றது.

சிவாஜியின் அன்னை ஜீஜாபாய் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரி ரெவிங்கிடனிடம் சொன்ன வார்த்தைகள் , சத்தியமான வார்த்தைகள் "பணம் ஒன்றுதானே உங்களுக்கு இலக்கு, அந்த பணத்தை தேடி எங்கெல்லாமோ சென்று சென்ற இடத்திலெல்லாம் குழப்பம் விளைவித்து அதில் குளிர்காய்வதுதானே உங்கள் கொள்கை?

எங்கிருந்தோ பணம் தேடி வருபவன் அதுவும் பெரும் கடல்தாண்டி வருபவன் எவ்வளவு வறுமையுற்றவனாக பேராசைக்காரனாக இருப்பான?, அவன் வியாபாரத்தில் எவ்வளவு பொய்யும் மோசடியும் கலந்திருக்கும்? அப்படிபட்டவன் போதிக்கும் தர்மம் மட்டும் எப்படி உண்மையாக இருக்கும் என சிந்தியாத எம்மக்களைத்தான் நாம் முதலில் திருத்தவேண்டும், திருத்துவோம்." என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.

More watch videos