விசிக சட்டமன்ற உறுப்பினர் மனைவி நகராட்சி தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில் அதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்வினை தெரிவிக்க தற்போது கனவிலும் மறக்க முடியாத பதிலடியை கொடுத்துள்ளனர் ஊர் பெண்கள்.
விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தனது மனைவிக்கு சீட் கேட்டு திமுகவிடமும் விசிக தலைவர் திருமாவளவனிடமும் முறையிட்டார் ஆனால் அவரது மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை இதையடுத்து கூட்டணி கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக தனது மனைவியை நிறுத்தினார் பனையூர் பாபு.
இந்த நிலையில் நகராட்சி தேர்தலில் அவரது மனைவி படு தோல்வி அடைந்தார் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் இந்த சூழலில் விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு ஆதரவாளர்கள் பெண்களுக்கு தேர்தலுக்கு முன்னர் கொடுத்த சேலையை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பெண்களிடம் அவமானமாக பேசியதாகவும் கூறப்படுகிறது, இந்த சூழலில் ஆவேசமடைந்த பெண்கள் சேலையை தூக்கி வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஒழுங்கான ஆம்பளையாக இருந்தால் இனி எவனும் ஓட்டு கேட்டு எங்க பக்கம் வரக்கூடாது எனவும் ஊர் பெண்கள் மிரட்டல் விடுத்தனர், இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த விசிக தலைவர் திருமாவளவன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம், மேலும் கூட்டணி கட்சியான திமுகவும் இதன் மூலம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம். இந்த சூழலில் ஊர் மக்களும் இனி வாக்கு கேட்டு படிவாசல் மிதிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்து இருப்பதால் அடுத்தது என்ன என்ற கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாக்கு வாங்க சேலை கொடுத்துவிட்டு அதனை திருப்பி கேட்க, பெண்கள் குப்பையில் வீசி எரிந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.