தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியில் கட்டப்பட்ட 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்துவைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சிக்கு மாநில அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வருகின்ற ஜனவரி 12 -ம் தேதி பிரதமர் மோடி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் முதல் முறையாக தமிழகம் வருவதால் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இது பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கவில்லை என்றால் திமுக அரசு அதன் மீதும் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார் எழுத்தாளர் சுந்தர ராஜா சோழன் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
அதிமுக ஆட்சியிலேயே பெரும்பாலும் முடிக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளை திறக்கத்தான் பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.விருதுநகர்,ராமநாதபுரம்,திண்டுக்கல்,நாமக்கல்,நீலகிரி,திருப்பூர்,கிருஷ்ணகிரி,நாகை,திருவள்ளூர்,அரியலூர்,கள்ளக்குறிச்சியில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
10 வருடம் UPA அரசில் சர்வ வல்லமையில் இருந்த திமுக அரசினால் இப்படி மொத்தமாக மருத்துவக் கல்லூரிகளை பெற முடியவில்லை, பாஜக ஆட்சிக்கு வந்து அதிமுக NDA கூட்டணிக்குள் போய் தமிழகத்துக்கு செய்த சாதனைகளில் இதுவும் ஒன்று. பிரதமர் மட்டும் வராமல் போயிருந்தால் இதன் மேலும் லேபிள் ஒட்டப்பட்டிருக்கும் நல்லவேளை வருகிறார்.காமராஜர் பிறந்த மண்ணில் மட்டுமல்ல அவர் ஆண்ட மண்ணிலும், அவர் கனவு கண்ட தேசியத்தின் ஆட்சி மலரும் என குறிப்பிட்டுள்ளார் சுந்தரராஜ சோழன்.