Tamilnadu

சம்பளம் இங்க விஸ்வாசம் எங்கே சாட்டையை சுழற்றிய ஜி தமிழ்.. வெளியேற்றபட்ட கருப்பு ஆடுகள் !

Zee tamil media
Zee tamil media

பிரதமர் குறித்து திட்டமிட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் காட்சி அமைத்த செயல் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கிய சூழலில்   அந்த தொலைக்காட்சியின் மும்பை தலைமை கடும் நடவடிக்கை எடுக்க சென்னை தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளது அத்துடன் இது போன்ற அரசியல் சார்புடைய நபர்களையும் நீக்கவேண்டும் எனவும் சென்னையை சேர்ந்த நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


தமிழகத்தில் இருக்கும் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலில் குழந்தைகள் சம்பந்தமான நசைச்சுவை ரியாலிட்டி ஷோ-வில், புலிகேசி மன்னர் போலவும், மங்குனி அமைச்சராகவும் இரு குழந்தைகளை கொண்டு பின்னணியில் சிலர் செய்த காட்சி தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை பேசியிருந்தனர். அதோடு வட மாநிலங்களில் தாங்கள் மாறுவேடத்தில் செல்ல வேண்டும் எனவும், தென்னகத்தில் மன்னராகவே வந்தாலும் யாரும் மதிக்க மாட்டார்கள் எனவும் குழந்தைகளை பேசும்படி சிலர் வசனம் எழுதி கொடுத்தனர் தெரிவித்தனர்.

இது சமூக வலைதளங்களில் வைரலானத்தைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சிக்கு பாஜக-வினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. பிரதமர் மோடியின் மாண்பை குறைப்பது போல அந்த நகச்சுவை காட்சி இருப்பதாகவும், இதனால் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்த சூழலில் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சூழலில், திட்டமிட்டு சித்தாந்தத்தை திணித்த சிலரை பணியில் இருந்து சேனல் நீக்கியுள்ளது, மேலும் சென்னையின் சேனலின் தலைமை நிர்வாக பொறுப்பில் இருக்கும் முக்கிய நபரை மாற்றுவது குறித்தும் அந்நிறுவனத்தின் தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாம்.

நாடு முழுவதும் தேசியவாத கொள்கையை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் தங்கள் சேனலை கொண்டே இந்த செயலை செய்துவிட்டார்கள் என மிகுந்த வேதனை அடைந்து இருக்கிறது தனியார் சேனலின் முதலாளி தரப்பு, இது குறித்து மிகுந்த அதிருப்தியை தலைமை சென்னையில் இருக்கும் சேனலின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர்.


இந்த சூழலில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடுவர்கள், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் என அனைவரும் தங்கள் விளக்கத்தை சேனலிடம் கொடுத்துள்ளனர், மேலும் பிரதமர் மீதான விமர்சன காட்சியில் நாங்கள் கைத்தட்டவே இல்லை,  எடிட்டர் அவ்வாறு சேர்த்து நாங்கள் அந்த நிகழ்ச்சியின் காட்சிகளை கைதட்டி உற்சாக படுத்தியது போன்று காட்சிகளை வைத்துள்ளார்கள்.

எங்களுக்கும் இந்த நிகழ்விற்கும் சம்பந்தம் இல்லை அனைத்தும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டர் பக்கம் நடந்தது தான் என முழு விளக்கத்தை நிகழ்ச்சியை நடத்திய நடுவர் தரப்பு தெரிவித்துள்ளது, இதையடுத்து நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், ஸ்கிரிப்ட் ரைட்டர், மேலும் பெரியாரிஸ்ட் கொள்கை கொண்ட பல நபர்களை நிர்வாகம் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பெயர், புகழ் அடையாளம், சம்பளம் என அனைத்தையும் பெறுவது இங்கே சேனல் மூலம் ஆனால் விஸ்வாசம் வேறு எங்கோ இருந்தால் எப்படி என ஒரே போடாக போட்டு பலரை வீட்டிற்கு அனுப்பியதாம் சேனல் நிர்வாகம். தொடர்ச்சியாக தமிழகத்தில் ஊடகத்திலும் சரி பொழுது போக்கு தொலைக்காட்சிகளிலும் சரி ஒரு சார்பு தன்மை காரணமாக பலர் தங்கள் வேலையை இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.