
சினிமா உலகில் ரசிகர் கூட்டத்தை ஒரு நடிகை அல்லது நடிகர் பெற்றுவிட்டால் அவர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு படம் நடித்தால் கூட போதும் அவர்களின் திறமை என்றுமே பாராட்டுகளை பெற்று விடும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனது அறிமுக திரைப்படத்திலேயே இளைஞர்கள் மனது ஆணித்தரமாக நின்றதோடு மட்டுமல்லாமல் பல பெண் ரசிகைகளையும் கொண்டு குடும்பத்தையும் தனது சினிமா கேரியரையும் சமாளித்து முக்கிய நடிகையாக வளர்ந்து வந்து கொண்டிருப்பவர் சிவாதாநாயர். யார் இந்த சிவாதா நாயர்?? நெடுஞ்சாலை படத்தில் நெற்றியில் சந்தனத்தோடு அவிழ்த்து விடப்பட்ட கூந்தலோடு பாவாடை சட்டையில் கேரள மனம் வீசும் தமிழ் பேசும் ஒரு தமிழ் நங்கையாக நெடுஞ்சாலையில் ஒரு ஹோட்டலை நடத்தி வரும் பெண்ணாக நடித்தவர் தான் இவர், சிவாதா பிறந்தது முதல் சிறு வயது வரை திருச்சியில் தான் இருந்துள்ளார்.
ஆனால் கேரளாவிற்கு புலம்பெயர்ந்து ஆதிசங்கரா பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் பட்டம் பெற்று, தனது நீண்ட நாள் காதலரான முரளி கிருஷ்ணனை திருமணம் செய்தார். தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. முன்னதாக கேரள கஃபே என்ற ஒரு மலையாள திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் தனது நடிப்பு பயணத்தை இவர் தொடங்கினாலும் அப்பிடத்தில் அதிக அளவில் வரவேற்பையும் கவனிப்பையும் இவர் பெறாததால் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதற்குப் பிறகு 2011ல் லிவிங் டுகெதர் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரிலும் நடித்து தமிழ் திரையுலகில் நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் மூலமே தமிழ் ரசிகர்கள் பலரின் மனங்களை கொள்ளையடித்தார் சிவாதா.
இதற்கு அடுத்து ஜீரோ திரைப்படத்தில் ஒரு அழகான காதல் மனைவியாகவும், அதே கண்கள் என்ற திரைப்படத்தில் ஒரு வில்லக் கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இருப்பினும் தனது நடிப்பையும் சிறந்த அழகையும் முக வசீகரத்தையும் திரையில் காட்டிய பிறகும் தொடர்ச்சியாக இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. அப்பொழுது மாதவன் நடிப்பில் வெளியான மாறா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்த நிலையில் சிவாதாவின் நடிப்பு பசிக்கு தீனி போடும் படமாக கருடன் திரைப்படம் அமைந்துள்ளது. அதாவது விடுதலை படத்தை தொடர்ந்து நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் கருடன். இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி ஷர்மா மற்றும் மொட்டை ராஜேந்திரன் என்ற பல நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் சிவாதா நாயரும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில், சிவாதாவின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்க வரவேற்புகளை பற்றி வருகிறது. இத்தனை காலமாக சிவாதா காத்துக் கொண்டிருந்த இந்த படத்திற்காகத்தானோ என்ற வகையில் அவரது நடிப்பு இந்த படத்தை மிகவும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த சிவாதா இந்த படத்தில் நடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அப்பொழுது சசிகுமார் குறித்தும் ஒன்று கூறியுள்ளார் அதுவே தற்போது இணையங்களில் கவனத்தைப் பெற்று வருகிறது. அதாவது இந்த படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்திருக்கும் சிவாதா படப்பிடிப்பின் பொழுது அவருடன் பேசும் பொழுது படத்தில் எப்படி ஒரு நட்பு என்றால் சசிகுமார் என்பது நமக்கு தோன்றுமோ அதேபோன்றுதான் நிஜ வாழ்க்கையிலும் அவர் இருக்கிறார். மேலும் மாலை பொழுது சசிகுமாருக்கு அவரது சமையல்காரர் தினம் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொண்டு வருவார் அந்த ஸ்னாக்ஸ் எப்பொழுது வரும் எங்களுக்கு கொடுப்பீர்களா என்று நாங்கள் ஆர்வத்துடன் காத்திருப்போம். ஏனென்றால் அந்த அளவிற்கு மிகவும் சுவையாகவும் டிஃபரண்ட் ஆகவும் இருக்கும் என்று சிவாதா அதில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகிறது.