Politics

தமிழக அரசு அதிகாரிகள் கைது மத்திய அமைச்சர் அதிரடி ! நாடு முழுவதும் பரபரப்பு!!

police
police

விவசாயிகளுக்கான நலத்திட்டத்தில் 100 கோடிக்கு மேல் தமிழகத்தில் மோசடி செய்யபட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளை கைது செய்து இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்து இருப்பது கடும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. “மத்திய அரசின் விவசாயிகளுக்கான நலத்திட்டத்தில் மோசடி செய்த தமிழக அரசின் விவசாய துறையை சேர்ந்த எட்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 182 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” என, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.


மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் மீது கூறியதாவது: மத்திய அரசின் விவசாய திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6,000 ரூபாய் உதவி தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தகுதியற்ற விவசாயிகளுக்கு போலி சான்றிதழ் வாயிலாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாடு முழுதும் கடந்த 8ம் தேதி வரை விவசாய துறை அதிகாரிகள், தரகர்கள் உட்பட 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் திருவள்ளூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் தலா ஒருவர், வேலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் தலா மூன்று பேர் என, விவசாய துறையைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மோசடி செய்தவர்களிடம் இருந்து 182.8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கான திட்டத்தில் 182 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றால் இன்னும் பல்வேறு துறைகளில் எத்தனை கோடி ரூபாய் அளவு மோசடி நடைபெற்று இருக்கும் என்பதை மத்திய மாநில அரசுகள் விரைவாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.