Tamilnadu

சமாளிக்கும் சேகர் பாபு..! இருந்தாலும் 10 நாளுக்குள் திறந்தீங்களா இல்லையா? கெத்து காட்டும் பிஜேபி!

sekarbabu
sekarbabu

வார இறுதி நாட்களிலும் இனி கோவில்கள் திறக்கலாம் என அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் இது பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பாஜக அறிவித்திருக்கின்றது.


இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கும்போது, "திருக்கோவில்களை வைத்து அரசியல் செய்வது அழகல்ல. பழம் தானாக பழுத்தாலும் அதை தாங்கள்தான் தடியால் அடித்து படுக்க வைத்தோம் என சிலர் சொல்வார்கள். அவர்களுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை என குறிப்பிட்டிருக்கிறார். 

கொரோனாவை கருத்தில்கொண்டு வார இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்கள் திறக்கப்படாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் டாஸ்மாக் மால் தியேட்டர்கள் என அனைத்தும் திறந்துவிட்டு கோவில்கள் மட்டும் திறக்காமல் வஞ்சகம் செய்கிறது திமுக என பாஜக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. விரைவாக கோவில்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

ஆனால் திமுக தரப்பில் இருந்து முறையான பதில் எதுவும் கிடைக்காத தருணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, " திமுக ஆட்சிக்கு பத்து நாட்கள் நேரம் கொடுக்கிறோம். அதற்குள் கோவிலை திறந்து விட்டால் நல்லது. இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்றவாறு சொல்லி 10 நாட்கள் முடிவதற்குள் அண்ணாமலை அவர்கள் ஆளுநரை சந்தித்ததும் அதற்கு அடுத்த நாளே ஆளுநரும்-முதல்வரும் சந்தித்ததும் உடனே வார இறுதி நாட்களிலும் கோவில்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

கோவில்களை மட்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டால் அது என்னகிமோ, பாஜகவிற்கு அடிபணிவது போல் என்றாகிவிடும் என்பதற்காக கூடுதலாக சில தரவுகளை சேர்த்து திமுக அரசு அறிவித்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்து உள்ளது. மேலும் அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கும்போது யாருடைய அழுத்தத்திற்கும் திமுக அரசு அடிபணியாது என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்.

நிலைமை இப்படி இருக்க அண்ணாமலை கொடுத்த அந்த பத்து நாட்கள் கடந்த பின் கோவிலை திறந்து இருக்கலாம் அல்லது பத்து நாட்கள் என சவால் விடுவதற்கு முன்பாகவும் கோவிலை திறந்து இருக்கலாம். இவை இரண்டுமே இல்லாமல் சொன்னது சொன்னபடி விஜயதசமியன்று கோவிலை திறக்கும்படி பாஜக செய்து விட்டனர் என்றே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பி இபப்டி ஒரு நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார்.