Tamilnadu

ஜோதிமணியை மறைமுகமாக சாடிய செந்தில் பாலாஜி இப்படி மூடி வச்சு எத்தனை நாள் மறைப்பது?

jothimani and senthil balaji
jothimani and senthil balaji

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜோதிமணியை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக சாடி இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சேங்கல்,  லாலாப்பேட்டை, அய்யர்மலை பகுதிகளில் துணை சுகாதார நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டங்களை தொடங்கி வைத்தார்.


அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் ஆறு மாதங்களில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது மேலும் விவசாயத்திற்கு மின்கட்டணம் மூலம் மின்சாரம் பெற்று வரும்  பூந்தோட்ட மின் இணைப்பு பெற்றவர்களுக்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இலவச மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகை மின் மாநிலம் என்று கூறியவர்கள் நான்கரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஏன் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் ஆறு மாதங்களில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது  விவசாயத்திற்கு மின்கட்டணம் மூலம் மின்சாரம் பெற்று வரும்  பூந்தோட்ட மின் இணைப்பு பெற்றவர்களுக்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இலவச மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் பேசியவர் ஒரு சிலர் தங்கள் இருப்பதை காட்டிக் கொள்வதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். செய்தித்தாள்கள் தொலைக்காட்சிகளில் தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் அப்படி செய்கின்றனர் என செந்தில்பாலாஜி குறிப்பிட்டார்.

சில நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் காங்கிரஸ் மக்களவை   உறுப்பினர் ஜோதிமணி உள்ளிருப்பு  போராட்டம் நடத்தினார் மேலும் இரவு முழுவதும் அங்கேயே தங்கி போராட்டம் நடத்தினார் .

இந்த சூழலில் செந்தில் பாலாஜி பேச்சு ஜோதிமணியை மறைமுகமாக தாக்கி பேசியதாகவே பார்க்க படுகிறது, செந்தில் பாலாஜியை ஜோதிமணி மறைமுகமாக விமர்சனம் செய்ய, செந்தில்பாலாஜி ஜோதிமணியை மறைமுகமாக விமர்சனம் செய்ய தொடர்ந்து இப்படி எத்தனை நாட்கள் தான் ஒருவரை ஒருவர் மறைமுகமாக விமர்சனம் செய்வீர்கள் மூடி மறைக்காமல் நேரடியாக விமர்சனத்தை வையுங்கள் என இரண்டு தரப்பையும் கரூர் மாவட்ட பாஜக மற்றும் அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.