Tamilnadu

பழைய பகையை தீர்க்கும் செல்வராகவன் அடுத்த படத்தின் கதை என்ன?

mohan ji selvaragavan and suriya
mohan ji selvaragavan and suriya

இயக்குனர் செல்வராகவன் தனது படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் குறிப்பிட்டு இருக்கும் சூழலில் கதை என்ன? ஏன் செல்வராகவன் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்ற பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. திரௌபதி எனும் புதிய முறை திரைக்கதை மூலம் புகழ்பெற்றவர் இயக்குநர்  மோகன் ஜி.  2016-ம் ஆண்டு ஆண்டு இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த மோகன் ஜி முதன் முதலில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கினார்.


அந்த படம் வெற்றி படமாக அமையவில்லை ஆனால் கடந்த 2020 ஆண்டு திரௌபதி என்ற படத்தை எடுத்திருந்தார். படத்தில் அஜித் மச்சான் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், திரௌபதி படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது அதே நேரத்தில் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றது  குறிப்பிட்ட சமுதாய மக்களை உயர்த்தியும் ஒரு தரப்பை விமர்சனம் செய்தும் மோகன் ஜி படத்தை எடுத்து இருப்பதாக  குற்றச்சாட்டுகள் எழுந்தன. மோகனுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

படம் முழுக்க முழுக்க பெண்களை ஏமாற்றும் நாடக காதலுக்கு எதிரானது எனவும் இதில் எந்த சாதிய சாயமும் இல்லை எனவும் மோகன் விளக்கம் அளித்தார்.படத்தை ஒரு தரப்பினர் எதிர்த்தாலும் மற்றொரு தரப்பினர் திரௌபதி படத்திற்கு ஆதரவாக திரையரங்கில் குவிந்தனர். இந்த  திரௌபதி  படத்தின் மூலம் மோகன் ஜி அடைந்த பிரபலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததே! அதன் பிறகு  மோகன் ஜி சமீபத்தில் 'திரௌபதி ‘ என்னும் பெயரிலான பதிப்பகம் ஒன்றையும்தொடங்கியிருந்தார் இது ஒருபுறம் என்றால் அடுத்தது ருத்ர தாண்டவம் திரைப்படம் வெளியானது அதில் கெளதம் வாசுதேவ் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ரிச்சி ரிச்சர்ட் மெயின் ரோல் செய்து இருந்தார்.

அந்த படமம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது இந்த சூழலில் இன்று மோகன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதில்.,எனது அடுத்த திரைப்படம் பற்றிய ஒரு அறிவிப்பு இன்று மாலை 06:40 மணிக்கு.. என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி” என குறிப்பிட்டு இருந்தார் இந்த சூழலில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடிக்கிறார் என்ற தகவலை பகிர்ந்து இருக்கிறார் மோகன், இந்த சூழலில் சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் புனைய பட்ட பல்வேறு தகவல்களுக்கு வரும் திரைப்படத்தில் மோகன் பதிலடி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெய்பீம் திரைப்படத்தில் வட்டார மொழியில் திரை கதை வசனம் எழுதிய எழுத்தாளர் கண்மணி குணசேகரன் இந்த படத்தில் வசனம் எழுதலாம் எனவும், திரையில் தன்னை ஓரம் கட்டிய நடிகர்கள் பலருக்கு தனது நடிப்பு திறன் மூலம் செல்வராகவன் பதிலடி கொடுக்கலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஏற்கனவே, செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். அதோடு, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.