Tamilnadu

என்ன அவ்ளோதானா "நக்கல் சிரிப்பு" சிரித்த அண்ணாமலை!

Annamalai
Annamalai

நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரண்டே கேள்விகளோடு நிறுத்திக் கொண்ட நிருபர்களை பார்த்து, "என்னங்கண்ணா வேகமா முடிச்சிட்டீங்க இன்னிக்கி" என்று கேட்டு நக்கல் சிரிப்பு சிரித்த அண்ணாமலை வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர் இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்வியும் அதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலையும் பார்க்கலாம்.


"அதிமுக மீதான திமுகவின் ஊழல் குற்றச்சாட்டு பற்றி…" கேள்விக்கு, "அதிமுக தவறு செய்தது என்று சொல்லும் திமுக ஏன் எந்த வழக்கும் பதியவில்லை? வழக்கு பதியுங்கள். அந்த சார்ஜ்ஷீட்டை பார்த்து பதில் சொல்கிறேன். செந்தில் பாலாஜி கோர்ட்டில் 'நாங்கள் பணம் வாங்கினோம், அதை திரும்ப கொடுத்துவிட்டோம்' என்று சொல்லி தங்கள் தவறை - ஊழலை - ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எவரும் ஏன் பேசவில்லை?" என்று கேள்வி எழுப்பிய நிருபரை வாயை அடைத்தார் அண்ணாமலை.

"அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, ஸ்டாலினை பற்றி பேசிவிட்டார் என்பதற்காக, 250 காவல்துறையினரை அனுப்பி மயிலாடுதுறையில் பாஜக துணைத்தலைவர் அகோரம் அவர்களை கைது செய்தது ஸ்டாலின் அரசு. அவரை நீதிமன்றம் முன் நிறுத்த, நீதிபதி 'எதற்கு இந்த வழக்கெல்லாம் போடுகிறீர்கள்? இதில் என்ன தவறு கண்டுபிடித்தீர்கள்' என்று கேட்டு பெயில் கொடுக்கிறார்." என்றும் குறிப்பிட்டார்.

"தமிழ்ப் புத்தாண்டு தைப் பொங்கல் பற்றி.." கேள்விக்கு, "ஆட்சிக்கு வந்து ஆறு மாதமாகியும் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. வெள்ளத்தில் ஊரெல்லாம் மிதக்கிறது. அதை மறைக்க இந்த மாதிரியான வேலையை செய்கிறது திமுக. அதை செய்ய விட மாட்டோம்" என்றார். "சட்டம் ஒழுங்கு பற்றி…" என்று கேட்டதற்கு, "ஸ்டாலின் சைக்கிளில் போக 9 ஆயிரம் காவல்துறையினர் அமர்த்தப்படுகின்றனர். அமைச்சர் வந்தால் அவரை வரவேற்க ஆயிரம் காவல்துறையினர். இப்படி காவல்துறையினரை துஷ்பிரயோகம் செய்வதால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை." என்றார் அண்ணாமலை. 

மொத்தத்தில் ஊடக துறையினர் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் அண்ணாமலை உடனடியாக பதிலடி கொடுத்து வருவதால் பல ஊடக நிறுவனங்களின் நிருபர்கள் கேள்வி என்பதே கேட்காமல் அமைதியாகிவிட்டனர்.  இதை பார்த்த அண்ணாமலை நக்கல் சிரிப்பு சிரித்தது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.