Tamilnadu

மைனர் என சுற்றுபவனை என்ன செய்ய போகிறது தமிழக காவல்துறை ? இந்த முறை இரு பிரிவு!

Mainor vijay
Mainor vijay

இந்தியாவில் எந்தமதத்தையும் பின்பற்ற அனைவருக்கும் உரிமை உண்டு அதே போல் எந்த மதத்தை ஏற்காதவர்கள் நாத்திகர்களாக வாழ உரிமை உண்டு இந்திய அரசியல் சாசனம் அதற்கான முழு உரிமையை வழங்கி இருக்கிறது, இந்த நிலையில் எந்த மதத்தையும் விமர்சனம் செய்யவோ மதம் குறித்து மோதலை உண்டாக்கும் வண்ணம் பேசவோ யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. அப்படி செயல்படுபவர்கள் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர், தொடர்ந்து இதே செயலில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.


அந்த வகையில் U2BRUTUS எனும் யூடுப் சேனலை நடத்தி வருபவன் விஜய் இவன் தன்னை மைனர் என பட்ட பெயரில் அழைத்துக்கொண்டுள்ளான், இவன் சமீபத்தில் அவனுடைய யூடுப் சேனலில் இந்து மத புராணங்கள் குறித்து மிகவும் அருவருக்க தக்க வகையில் விமர்சனம் செய்யும் உரையாடல்களை நடத்தியுள்ளான். இதில் இந்து தெய்வங்களை இழிவாக திட்டமிட்டு பரப்பி இருக்கின்றனர்,இந்த வீடியோ இணையத்தில் இரு பிரிவினர் இடையே மோதலை உண்டாக்கும் வகையில் அமைந்து இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், தன்னை நாத்திகனாக காட்டி கொள்ளும் மைனர் என்ற பெயரில் ஒளிந்து இருக்கும் விஜய் என்பவன் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன் என கூறப்படுகிறது.

இந்த சூழலில் இந்து மதத்தை சேர்ந்தவர்களை இழிவு படுத்துவதில் திட்டமிட்டு கூட்டு சதி செய்து தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் விதமாக மைனர் என்பவன் செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன மேலும் தொடர்ச்சியாக பல்வேறு வீடியோக்களையும் அவன் வெளியிட்டு வருகிறான். இதே போன்று ஒரு காணொளி தான் ஆந்திராவில் மிக பெரும் மோதலுக்கு வித்திட்டது தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இரு பிரிவினர் இடையே மோதலை உண்டாக்க இது போன்ற சமூக வலைத்தள பதிவே அமைந்தது அப்படி இருக்கையில் சமூகவலைத்தளத்தில் தொடர்ச்சியாக மோதலை உண்டாக்கும் விதமாக பதிவுகளை பதிவு செய்து வரும் மைனர் என்பவனை கைது செய்யாமல் தமிழக காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பட்டா கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்களை தனிப்படை அமைத்து கைது செய்யும் காவல்துறை ஏன் திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கும் வகையில் வீடியோ வெளியிடும் மைனர் போன்றவர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது என்று கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். மைனர் எனும் அடைமொழியுடன் வலம் வரும் நபர்களை காவல்துறை கைது செய்யவில்லை என்றால் எதிர்காலத்தில் விவேக் படத்தில் வரும் "மைனர் " காமெடியை போன்று பொதுமக்களே சட்ட ரீதியாக தண்டிக்கும் சூழல் உண்டாகும் என்ற எச்சரிக்கைகளும் பலராலும் கொடுக்கப்பட்டு வருகின்றன.