காவல்துறையில் அலுவலக கிளார்க் பணியில் இருந்த சங்கர் என்பவர் இணையதளம் ஒன்றிணை சவுக்கு என்ற பெயரில் தொடங்கி நடத்தினார் அதன் பிறகு சவுக்கு சங்கர் என்ற பெயரில் அழைத்து கொண்டார், இதற்கிடையில் தற்போது யூடுப் சேனல்கள் பலவற்றில் நேர்காணல் செய்யப்படும் சவுக்கு சங்கர் பல கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இந்த கருத்துக்கள் பலவற்றில் உண்மை இல்லை என சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியும் வேலையில் தற்போது சவுக்கு சங்கர் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு சிக்கி இருக்கிறார் அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கட்சியினரும் தேசிய தலைமையும் அதிருப்தியில் இருப்பதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சூழலில் சவுக்கு சங்கர் பரப்பிய பொய்கள் என பட்டியல் ஒன்று வெளியாகி இருக்கிறது அதில் 2018 ஆகஸ்ட் 15 தான் திரு. மோடி தேசியக் கொடியேற்றும் கடைசி சுதந்திர தினம் என்று சொல்லி, அடித்துப் பேசி தனது புலனாய்வு திறமையை காட்டி இருந்தார் ஆனால் இறுதியில் முன்பை காட்டிலும் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றார் மோடி. மேலும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டப்பட்ட முதல் நாள் அன்று ராமர் கோவில் கட்டுமானம் நடக்காது உலக அளவில் பிரச்சினை ஆகும், கேன்சல் ஆகும் என்று ஒரு தகவலை பகிர்ந்தார் ஆனால் அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை, மேலும் பிரதமர் மோடிக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் இடையே மோதல் நிகழ்கிறது, பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை எனவும் அடித்து விட்டார் சவுக்கு
இந்த வரிசையில் இப்போது அண்ணாமலையை யாருக்குமே கட்சியில் பிடிக்கவில்லை என ஒரு புரளியை கிளப்பிவிட்டு இருக்கிறார். இந்த பொய் பட்டியலில் இருந்தே சவுக்கு சங்கர் புலனாய்வு புலியல்ல புளியங்கொட்டை என பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர், மேலும் சவுக்கு சங்கர் அண்ணபூரணி அரசு இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, சவுக்கு சங்கர் அரசியல் ஏற்கனவே நடந்த விஷயங்களை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் அண்ணபூரணி அரசு தான் ஒரு சக்தி என மக்களை ஏமாற்றுகிறார் என கிண்டல் அடித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.