வைரலாகும் வீடியோ சவுக்கு சங்கர் டோட்டல் க்ளோஸ்!!!Savukku sankar
Savukku sankar

பொங்கல் பரிசு தொகுப்பு கொடுத்தார்களும் கொடுத்தார்கள் இந்த திமுகவினரும் அவர்களது துணை இணை மற்றும் ஆதரவாளர்கள் இணையதள வாசிகளிடம் சிக்கி சிதைந்து வருகின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பு தரமானதாக இல்லை என்ற குற்றசாட்டு எழுந்த சூழலில் தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது.

இதில் கலந்து கொண்ட திமுகவை சேர்ந்த கோட் சூட் சரவணன் வெல்லத்தின் மெல்டிங் பாய்ண்ட் தெரியுமா? வெயிலில் வெல்லம் உருகதான் செய்யும் என கேள்வி எழுப்ப அவ்வளவுதான் நெட்டிசன்கள் வைத்து செய்து விட்டனர், மார்கழி மாதத்தில் குளிர் சில்லுனு இருக்கப்பவே வெல்லம் உருகுது என்றால் பங்குனி வெயிலில் என்ன ஆகும் என தொடங்கி சரவணனின் பேச்சை இணையத்தில் வைத்து செய்து விட்டனர். அர்ணாப் கோசுவாமி காஸ்மீர் தொடர்பான விவாதம் ஒன்றில் சரவணனை பாதியில் வெளியேற்றும் போது சரவணன் கிண்டலுக்கு உள்ளானதை காட்டிலும், வெல்லத்தில் மெல்டிங் பாயிண்ட் தெரியுமா? என கேட்ட கேள்வி மூலம் உலக அளவில் அறிவாளியாக அறிய படும் நிலைக்கு சென்று இருக்கிறார்.

இது ஒருபுறம் என்றால் திமுக ஆதரவாளராக அறியப்படும் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜோடியை இணையதள வாசிகள் வைத்து செய்துள்ளனர் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது, இந்திய பிரதமர் அலுவலகம் முதல் அமெரிக்க அதிபர் விவகாரம் வரை அருகில் இருந்து பார்த்தது போன்று கருத்து சொல்லும் சவுக்கு சங்கரை வைத்து செய்துள்ளனர் நெட்டிசன்ஸ். இந்த வீடியோவில் கம்பி கட்டும் கதை ஒன்றை சவுக்கு சங்கர் சொல்ல அதற்கு அடுத்த பக்கத்தில் இருக்கும் நபர் முட்டு கொடுtப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Share at :

Recent posts

View all posts

Reach out