பாஜகவினர் ஒட்டிய போஸ்டருக்கு பதிலடி கொடுப்பதாக போஸ்டர் ஒட்டி உண்மையை வெளிவர உதவியுள்ளனர் திமுகவினர், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும் என ஆளும் அதிமுக அரசை வற்புறுத்தியது, மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5 ஆயிரம் ரூபாய் பொங்கலுக்கு கொடுப்போம் என திமுகவினர் வாக்குறுதி கொடுத்தனர். இந்த சூழலில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் பொங்கலுக்கு எந்த பணமும் கொடுக்கவில்லை மேலும் பொங்கல் பரிசு தொகுப்பும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது பொருள்களின் தரம் மலிவாக இருப்பதாக பலரும் குற்றம் சுமத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகின இந்த சூழலில் மீம்ஸ்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இதற்கிடையில் கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஒன்றிணை ஒட்டியுள்ளனர் அதில் விடியல் அரசே பொங்கல் பண்டிகையின் போது 5 ஆயிரம் கொடுப்போம் என சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி இருந்தனர் இந்த போஸ்டர் இணையத்தில் கடும் வைரலானது மேலும் பொதுமக்கள் மத்தியிலும் சென்று அடைந்தது. இந்த சூழலில்தான் இதற்கு பதிலடி கொடுக்க திமுகவினர் முடிவு செய்தனர், இப்போது தேர்தலின் போது 15 லட்சம் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் போடுவோம் என சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு என பாஜகவை நோக்கி போஸ்டர் அடித்து கேள்வி எழுப்பியுள்ளனர் திமுகவினர், ஆனால் திமுகவினர் ஒன்றை மறந்துவிட்டனர் மோடி எங்குமே அவ்வாறு சொல்லவில்லை கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவந்தால் அத்தனை அளவு பணம் இருக்கும் என உவமையாக சொன்னார்.
இந்த சூழலில் போலியாக ஒரு குற்றசாட்டை முன்வைத்து போஸ்டர் ஒட்டிய திமுகவினர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர், நாளையே மோடி 15 லட்சம் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் போடுவோம் என சொன்னார் என்பதை நிரூபி என தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்ட இருக்கிறார்களாம், இதன் மூலம் 15 லட்சம் என பல நாட்களாக ஊடகங்கள் மூலம் பாஜகவிற்கு எதிராக பரப்பிய பொய்யை மக்களிடம் எளிதில் உண்மையை கொண்டு சேர்க்க திமுகவே பாதை அமைத்து கொடுத்துவிட்டனர் என்கின்றனர் பாஜகவினர்.
முதல்வர் முக ஸ்டாலின் 5 ஆயிரம் கொடுக்கவேண்டும் என கூறிய வீடியோ காட்சிகள் இருக்கிறது ஆனால் பிரதமர் மோடி இந்தியில் என்ன கூறினார் என்று கூட தெரியாமல் பரப்புகின்றனர் என திமுகவினர் ஒட்டிய போஸ்டரை பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றனர் பாஜகவினர்.