ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளி, ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதற்காக நஃபிசா அடாரி என்ற ஆசிரியயை பணியில் இருந்து நீக்கியுள்ளது.அக்டோபர் 25 அன்று, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளியின் ஆசிரியை நஃபிசா அதாரி என்ற ஆசிரியையின் வாட்ஸ்அப் பதிவு சமூக ஊடக தளங்களில் வைரலாகத் தொடங்கியது. பதிவில், அடாரி, “ஜீத் கயே, நாங்கள் வென்றோம்” என்ற உரையுடன் பாகிஸ்தான் வீரர்களின் படத்தைப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து நபீசா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கும் அவர் தனது வகுப்பில் குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். மேலும் பள்ளி நிர்வாகத்திற்கும் புகார்கள் சென்றன.
இதையடுத்து நபீசா அடாரி மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது, திங்கட்கிழமை மாலை, பல நெட்டிசன்கள் ட்விட்டரில் பள்ளி வெளியிட்ட பணிநீக்க அறிவிப்பைப் பகிர்ந்துள்ளனர், அதில் நஃபிசா ஆசிரியை பணியில் இருந்து நீக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.சோஜாதியா அறக்கட்டளையின் கூட்டத்தின் போது நீரஜா மோடி பள்ளியின் ஆசிரியை நஃபிசா அடாரி உடனடியாக பள்ளியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று இந்தியில் அந்த நோட்டீஸில் எழுதப்பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளை நீரஜா மோடி பள்ளியை நடத்துகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிவிப்பில் குறிப்பிடவில்லை.இந்தச் செய்தியை உறுதிப்படுத்த ஓப்இந்தியா உதய்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளியை அணுகியது. இந்த சந்திப்பின் போது நஃபிசா அடாரி நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்த பள்ளி, சமூக ஊடக தளங்களில் பரவும் தகவல்கள் தஉண்மைதான் என்று கூறியது.
தான் பாகிஸ்தானிய ஆதரவாளர் இல்லை என்று நபீசா கதறல் :- ஆசிரியை விளக்கம் கொடுத்த வீடியோவும் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது, அதில் அவர் தனது பதிவு "தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக " எகூறினார். போட்டியின் போது, தனது குடும்பம் இரண்டு அணிகளாகப் பிரிந்ததாகவும், ஒரு அணி இந்தியாவிற்கும் மற்றொரு அணி பாகிஸ்தான் அணிக்கும் ஆதரவளித்ததாகவும் நஃபிசா கூறினார்.
எனவே எங்கள் குழு வெற்றி பெற்ற காரணத்தால் வாட்ஸாப் செயலியில் வெற்றி பெற்றோம் என ஸ்டேட்டஸ் வைத்தேன் “என்னுடைய ஸ்டேட்ஸை பார்த்த ஒரு பெற்றோர் நான் பாகிஸ்தானை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டார். நான் ஆம் என்றேன். செய்தியின் முடிவில் ஒரு எமோஜி இருந்ததால் இது நகைச்சுவை என்று நினைத்தேன்.
குறிப்பிட்ட பெற்றோர் அனுப்பிய செய்தியில் கடைசியில் ஃபேஸ்பாம் ஈமோஜி இருந்தது. மேலும், தான் ஒரு இந்தியாவின் தேசபக்தர் என்றும் பாகிஸ்தானை ஆதரிக்க முடியாது என்றும் நஃபிசா கூறினார். நபிஷா குடும்பத்தினர் இரண்டு அணியாக பிரியவில்லை ஒரே அணியாக பாகிஸ்தானை ஆதரித்தார்கள் ஆனால் விஷயம் தற்போது வெளியே தெரிய நபிஷா பொய் கூறுவதாக நபிஷா மீது குற்றசாட்டுகள் அடுகடுக்காக கூறப்படுகிறது.