துபாயில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றன,வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியை உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது, இதனை பாகிஸ்தான் நாட்டினர் கொண்டாடி வரும் வேலையில் இந்தியாவில் உள்ள சில புல்லுருவிகளும் கொண்டாடி வந்தனர்.
சிலர் வெளிப்படையாக எதிரி நாடன பாக்கிஸ்தானிற்கு ஆதரவுதெரிவித்தனர், இந்த சூழலில் இந்தியா பாகிஸ்தான் போட்டி கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் இதுகுறித்து பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார், அதில் கிரிக்கெட்டில் இந்திய அணியினை வென்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்து தேசவிரோத பேச்சுக்கள் பேசிய ராஜஸ்தான் ஆசிரியினையின் வேலை பறிப்பு, காஷ்மீரிலும் உபியிலும் பாகிஸ்தான் ஆதரவு என தேசவிரோதம் பேசியோர் கைது
தமிழ்நாட்டிலும் இந்த "அக்கரை பச்சை" ஆதரவு கோஷ்டிகள் பகிரங்கமாக அதையே பேசிகொண்டிருக்கின்றன, இவர்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை , அரசு இருக்கும் மாறும், கட்சிகள் ஆளும் மாறும் ஆனால் நாடு நிலையானது, நாட்டுபற்று ஒவ்வொருவரிடமும் நிரம்ப இருக்க வேண்டும் ,அது இல்லாதவர்களும், விளையாட்டில் கூட பிரதமர் மேலான வெறுப்பை எதிரிநாட்டுக்கு ஆதரவு என கொடுப்பவர்களும் குறிவைத்து அடக்கபடவேண்டியவர்கள் அல்லது விரும்பிய "அக்கரை பச்சை அழகு நாட்டுக்கு" அனுப்பபட வேண்டியவர்கள்
இந்நாட்டில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, இந்நாட்டின் பாதுகாவலில் நிம்மதியாக இருந்து கொண்டு, இந்நாட்டை காக்கும் இந்நாட்டு ராணுவத்தை அந்த எதிரிநாட்டு களவுபடைகள் எல்லையில் சுட்டு கொன்றுகொண்டிருக்கும் பொழுது எதிரிநாட்டுக்கு மத அடிப்படையில் கைதட்டுவதெல்லாம் தண்டனைகுரிய குற்றம்
நாட்டைவிட மதம் முக்கியமென்றால் இவர்களுக்கு இத்தேசத்தில் என்ன வேலை? எதற்காக அத்தேசம் பிரிக்கபட்டதோ அங்கே சென்று ஆரதழுவி கைதட்டி கொண்டே இருக்கலாம். என மிகவும் கண்டிப்புடன் குறிப்பிட்டுள்ளார் மற்ற மாநிலங்களில் நடவடிக்கை எடுப்பது போன்று தமிழக அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.