தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது,தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து வேட்பு மனுத்தாக்கல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் பணிகள் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 கோடியே 2,67,446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிமுக, திமுக, அமமுக-தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் என இந்தத் தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
இருப்பினும் அதிமுக மற்றும் திமுக-வுக்கு இடையே தான் தீவிரப் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக, மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிக மெனக்கெட்டு வருகிறது. நகைக்கடன் தள்ளுபடி, வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர், வாஷிங் மெஷின் என இதற்காக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறது.
அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு இரவு 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது, வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு என்றால் அதிகப்படியான அளவு வாக்கு பதிவாகவும், ஆனால் தற்போதைய நிலவரப்படி 72% வாக்குகள் அளவிற்கு தான் பதிவாகி இருக்கிறது.
அதனால் ஆளும் கட்சிக்கு சாதகமான முடிவாக அமையலாம் என திமுகவினர் அச்சமடைந்துள்ளனர், குறிப்பாக சென்னையில் பூத் ஏஜெண்டுகள் மூலம் கிடைத்த தகவல் திமுகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது, ஆனால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து கிடைக்கும் முடிவுகள் திமுகவிற்கும் அதன் கூட்டணிக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
குறிப்பாக வட மாவட்டங்கள், கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களில் அதிமுக கை ஓங்கி இருக்கிறது என பூத் ஏஜெண்டுகள் மூலம் தகவல் கிடைத்து வருவதால் திமுக தலைமை கடும் ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது, ஆ ராசா பேச்சு, இந்து கடவுள்களுக்கு எதிரான திமுகவினர் செயல்பாடு ஆகிய காரணங்கள் தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது