தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தமிழக ஊடகங்களை சந்தித்து தெரிவித்த கருத்துக்கள் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் ஆலயங்களை அனைத்து நாட்களிலும் திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
அத்துடன் 10 நாட்கள் தமிழக அரசிற்கு அவகாசமும் வழங்கி இருந்தனர்,10 நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்கவில்லை என்றால் மிக பெரிய போராட்டம் நடத்துவோம் எனவும் ஆலயத்திற்குள் செல்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார் அண்ணாமலை, இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,1000 பாஜகவினர் வந்தாலும் திமுகவை அசைத்து பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.
அத்துடன் மத்திய அரசிடம் கோவிலை திறக்கலாம் என்ற அனுமதி வாங்கி வந்தால் உடனே கோவிலை திறக்கிறோம் என சவாலும் விடுத்தார் சேகர்பாபு, இதற்கு நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பதில் கொடுத்தார் அண்ணாமலை, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தொற்று 5% அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் அதிக பட்சமாக 2 சதவிகிதம் தொற்று எண்ணிக்கை உள்ளது, எனவே கோவில்களை திறப்பதில் எந்த தவறும் இல்லை உடனடியாக கோவில்களை திறக்கவேண்டும் என கூறினார், ஏற்கனவே 10 நாட்களில் மூன்று நாட்கள் முடிந்துவிட்டது இன்னும் மீதம் இருப்பது 7 நாட்கள் அதற்குள் கோவில்களை திறக்கவில்லை என்றால் நிச்சயம் ஸ்தம்பிக்க வைப்போம் எனவும் தெரிவித்தார்.
மேலும் 1000 பேர் வந்தாலும் எதுவும் செய்யமுடியாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார் அவருக்கு ஒன்றை தெரிவித்து கொள்கிறோம் நீங்கள் 40 ஆண்டுகளாக இருக்கலாம் ஆனால் உங்களை சமாளிக்க எங்களின் 100 பூத் தலைவர்கள் போதும் அவர்களை அனுப்பி வைக்கிறோம் முடிந்தால் பார்க்கலாம் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த சூழலில் அண்ணாமலையின் அறிவிப்பில் இருந்து தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறக்கவில்லை என்றால் பாஜக மிக பெரிய அளவில் போராட்டங்களை நடத்த தயாராகி வருவது தெளிவாக தெரிகிறது, இது குறித்து அமைச்சர் சேகர் பாபு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார், டாஸ்மாக் தியேட்டர் போன்றவை வாரம் முழுவதும் திறந்து இருக்கும் போது கோவில் மட்டும் மூடி இருப்பது ஏன் என போகும் இடங்களிலும் மக்கள் கேட்க தொடங்கிவிட்டனர்.
இதே நிலை நீடித்தால் அவர்கள் போராட்டம் நடத்திய பின்புதான் நாம் திறந்தோம் என்ற கருத்து நிலவ வாய்ப்பு உள்ளது, எனவே கோவில் உட்பட அனைத்து வழிபாட்டு தளங்களையும் திறப்பது சரி என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார், இதற்கு பதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இப்போது திறந்தால் அவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் தான் நாம் திறந்தோம் என கருத்துக்கள் எழும் அது ஒரு சின்ன பையன் மிரட்டி நாம் செய்தது போல் ஆகிவிடும் அந்த நிலை வர கூடாது.
பொறுத்து இருங்கள் என்ன செய்யலாம் என உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கலாம் என ஸ்டாலின் சேகர் பாபுவிடம் தெரிவித்து இருக்கிறார், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்து இருக்கலாம் ஆனால் அது அமைதியாக இருக்கும் சூழலில் பாஜக கையில் எடுத்து ஆளும் அரசிற்கு கெடு விதித்து இருப்பதும் பாஜகவின் வளர்ச்சியை உறுதி படுத்தி வருகிறது.
அதிலும் குறிப்பாக அண்ணாமலையின் செயல்பாடுகள் ஆளும் அரசிற்கும் திமுகவிற்கும் மிக பெரிய தலைவலியாக மாறி இருப்பது கோவில்கள் திறப்பு விஷயத்தில் உறுதியாகி இருக்கிறது. இன்னும் என்னவெல்லாம் வரும் காலங்களில் அரங்கேற இருக்கிறதோ?