தமிழக ஊடகங்களில் சமீபத்தில் நடைபெறும் விவாதங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருகிறது , அதிலும் குறிப்பாக வலதுசாரிய ஆதரவாளர்கள் என நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்கள் விவாதத்தில் தாங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் மூலம் எதிர் தரப்பினர் உடன் நெறியாளருக்கு கதறும் சூழல் உண்டாகியுள்ளது என்றே கூறலாம் சமீபத்தில் ஸ்ரீராம் கார்த்திகை செல்வனிடம் எழுப்பிய கேள்விகள் சமீபத்தில் வைரலான நிலையில் .,
தற்போது நவநீத் என்ற வலதுசாரிய சிந்தனையாளர் தனியார் ஊடகத்தில் நடத்திய விவாதமும் அவர் எழுப்பிய கேள்விகளும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது ,கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக 25 கோடிக்கு வாங்கிவிட்டது என தெரிவித்தார் ,அவர் அதை சொன்னதுதான் மிச்சம் திமுக பங்கேற்பாளர் தொடங்கி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கனகராஜ் விவாதத்தை தொகுத்து வழங்கிய நெறியாளர் என அனைவரும் கதற தொடங்கிவிட்டனர் .
நான் ஒன்றும் இல்லாத தகவலை சொல்லவில்லை திமுகவின் தேர்தல் கணக்கில் அதை சொல்லியிருக்கிறார்கள் என்னமோ காசு வாங்காததுபோல் பேசுவது தவறு என ஒரே போடாக போட்டார் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது . பாஜக அதிமுகவினர் தமிழக ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்படவில்லை என கூறி விவாதத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்தன .
இதனால் விவாத நிகழ்ச்சியை நடத்த ஊடகங்கள் புதிய வலதுசாரிய சிந்தனையாளர்களை தேடும் போது நிகழ்ச்சியில் பங்கேற்கவரும் வலதுசாரிய ஆதரவாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பில் தங்கள் கருத்துக்களை ஆணித்தனமாக அதே நேரத்தில் ஆதாரங்களுடன் எடுத்து வைப்பது ஊடகங்களை இதுநாள் வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இடதுசாரிய ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் .