Tamilnadu

முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீர் கைது தென் மாவட்டங்களில் பதற்றம் பழிவாங்கும் படலத்தை கையில் எடுக்கிறதா திமுக ?

pon.radhakrishnan
pon.radhakrishnan

தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் பாஜக பிரமுகரை நேரில் சென்று தாக்குதல் நடத்திய திமுக MP மற்றும் அவரது கட்சியினரால் கடும் பதற்றம் உண்டாகியுள்ளது, இந்நிலையில் பாஜக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தை கேள்வி எழுப்பி திமுக MP மீது வழக்கு பதிவு செய்ய போராட்டம் நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு இருப்பது விவகாரத்தை விஸ்வரூபம் ஆக்கியுள்ளது.


நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 12வது ஒன்றிய கவுன்சில் பகுதியில் பாஜக நிர்வாகி பாஸ்கர் என்பவர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக  பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பாஜக நிர்வாகி பாஸ்கரை முன்னாள் அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் குறித்து விசாரித்ததோடு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் வள்ளியூர் ஒன்றியம் 12வது வார்டு வேட்பாளருக்கு பணிபுரிந்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பாஸ்கர் என்பவரை நேற்று இரவு இந்தப் பாராளுமன்றத் தொகுதி உடைய உறுப்பினர் ஞானதிரவியம் அவர்களும், அவருடைய கட்சியைச் சேர்ந்த நபர்களும் சேர்ந்து பாஸ்கர் அவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

அவருடைய உடல் முழுவதும் வேதனையில் இருந்து கொண்டிருக்கிறது என சொல்கிறார்கள். மர்மப் பகுதியில் மிதித்த காரணத்தால் மிகக்கடுமையாக தான் பாதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்.மருத்துவமனையில் இருந்து அவரை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு நோயாக தாக்குதலாக இருந்தாலும் கூட அதனுடைய பாதிப்பை கண்டறிய 48 மணி நேரம் ஆகும் 72 மணி நேரம் ஆகும் என சொல்லக்கூடிய நிலையில் இன்று உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என சொல்கிறார்கள். சாதாரணமாக அரசு மருத்துவமனையில் ஸ்கேன் , எக்ஸ்ரே  உள்ளிட்ட முடிவுகள் வர இரண்டு நாள் ஆகும்.

ஆனால் இவருடைய முடிவுகள் தயாராக உள்ளது. இவ்வளவு வேகமாக அரசு மருத்துவமனை செயல்படுவதை பார்த்தால் ரொம்ப சந்தோசமாக உள்ளதாகவும் ஆனால் பாஸ்கருக்கு மட்டுமே இதுபோன்ற துரிதமாக நடைபெறுகிறது. பக்கத்தில் இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு இரண்டு நாள் ஆன பின்னும் கூட ரிப்போர்ட் கிடைக்கவில்லை ஆகையினால் இந்தத் தாக்குதலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுகின்ற முயற்சியில் மருத்துவத் துறையினர் சேர்ந்து பணிபுரிகிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது.

தமிழக முதல்வர் அவர்களுக்கு காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி அவர்களுக்கு என்னுடைய கோரிக்கை, தாக்குதல் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்தாக வேண்டும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் அவரை அழைத்து சென்றது கட்சித் தொண்டர்களா அடியாட்களா  என்று தெரியாது ஆனால் அவர்கள் மீதும் முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார் இல்லை என்றால் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார், இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் திமுக MP மீது முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார்.

விவகாரம் அடுத்த கட்டத்திற்கு செல்வதை அறிந்த காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனை கைது செய்தனர், இந்நிலையில் தாக்குதல் நடத்திய திமுக MP மீது நடவடிக்கை எடுக்காமல் நீதி கேட்டு போரட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து இருப்பது கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது, இந்த நிலையில் நெல்லையில் பாஜக வெற்றி பெற்ற இடங்களில் ஒன்றாக இருப்பதும் பாஜக செல்வாக்கு உள்ள இடங்களில் தென் மாவட்டங்கள் ஒன்று என்பதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் அதற்கு ஆளும் கட்சியின் MP தன்னிடம் வேலை பார்த்த கூலி தொழிலாளியை அடித்து கொன்றதே சாட்சி என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.