Tamilnadu

முதல்வர் ஸ்டாலின் மீது பிரிவிலேஜ் மோஷன் கொண்டுவரமுடியும் ஸ்ரீராம் சேஷாத்திரி அதிரடி

Sriramseshadri
Sriramseshadri

சட்டசபையில் தவறான தகவலை அளித்துள்ள காரணத்தால் முதல்வர் ஸ்டாலின் மீது previlege motion கொண்டுவரமுடியும் என அரசியல் விமர்சகரும் பொருளாதார நிபுணருமான ஸ்ரீராம் சேஷாத்திரி குறிப்பிட்டுள்ளார், இது குறித்து அவர் வெளியிட்ட முகநூல் பதிவு பின்வருமாறு : -


நேற்று சட்டசபையில் மூன்று விஷயங்களில், எதிர் கட்சிகளின், தயார் நிலை பற்றிய புரிதல் கிடைத்தது, இனிமேல் தமிழக சட்டசபை  விவாதங்கள் எப்படி இருக்கப்போகிறது என்றும் தெரிந்தது  நயினார் நாகேந்திரன் அவர்கள், தேவை இல்லாமல் முதலமைச்சரிடம் ஏன் ஒன்றிய அரசு என்று அழகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இது ஏதோ திமுக இந்த கேள்வி கேட்கப்படவேண்டும் என்று தயார் நிலையில் இருந்து இவர் அவர்களுக்கு உதவும் வகையில் கேள்வியை எழிப்பினாரோ என்ற சந்தேகம் வர வைத்தது. நாம் முன்னமே பதிவிட்டமாதிரி ஒன்றிய அரசு என்று கூறுவதில் என்ன பிழை என்பதை உணர்ந்து இந்த கேள்வியை எழுப்பியிருந்தால், முதல்வர் இந்திய நாடு மாநிலங்களினால் உருவானது என்று..,

அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பான கருத்தை அவையின் குறிப்பில் வரும் விதமாக பேசியதை துணை கேள்வி மூலம் விளக்க சொல்லியிருக்க வேண்டும்.உண்மைக்கு புறம்பான கருத்தை முதல்வர் கூறுவது சட்டசபையில் மாண்பை குறைந்துள்ளது, இதனால் எந்த உறுப்பினரும் முதல்வர் மீது previlege motion கொண்டுவர முடியும்.

 நயினார் அவர்களிடம் முதல்வர் நீட் தேர்வை தமிழகத்துக்கு விலக்கு வாங்கி தர பாஜக உதவுமா என்ற கேள்விக்கு, பாஜகவின் கொள்கை மூலம் பதில் கூறியிருக்க வேண்டும். நீட் அவசியமானது என்பது பாஜகவின் கொள்கை, அதை விடுத்து சட்டத்திற்கு உட்பட்டு விலக்கு பெற பாஜக ஒதுத்துழைக்கும் என்று பதில், பாஜகவின் கொள்கையில் மாற்றமா அல்லது, தவறா என்பதை பாஜக தெளிவு படுத்தவேண்டும்.

தமிழக நிதியமைச்சர், சட்டசபையில், மத்திய அரசு, மத்திய GST நிதி பகிர்வில் மாநிலங்களுக்கு வெறும் 4% மட்டுமே பகிர்ந்தளிக்கிறது என்று கூறியுள்ளார், இதுவும் உண்மைக்கு புறம்பான கூற்று. இதற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், previlege motion கொண்டு வர முடியும்.குறைந்த பட்சம், ஆளுநரிடம், அரசியல் சாசனத்துக்கு புறம்பான கருத்தை இந்த அரசாங்கம் கொண்டுள்ளது என்றாவது புகார் கொடுக்க வேண்டும்.

ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியாலா செய்யும் என்று கூறினார், அது 100% சரியான வாதம், ஆனால் இப்போதுள்ள எதிர்கட்சி அவியல் தான் செய்கிறதோ என்று நினைக்க தோன்றுகிறது.பாஜகவும், அதிமுகவும் திமுகவிடம் இருந்து பாடம் கற்பதில் தவறில்லை என்பது என் தாழ்மையான கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.