மதுரை சேர்ந்த பாஜக உறுப்பினர் கே.கே என்பவர் தொடர்ந்து திமுக மீதான குற்றசாட்டுகள், செயல்பாடுகள் குறித்து பல்வேறு விதத்தில் சமூக வலைத்தளங்களில் எடுத்து கூறி வருகிறார், தினசேவல் என்ற வலைத்தளம் மற்றும் யூடுப் சேனல் ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது கே. கே மீதும் அவர் பேட்டிகண்ட திருமாறன் ஜி மீதும் மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, திமுக ஆட்சியின் அவலங்களையும் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் குறித்த பல்வேறு கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார், திருமாறன்.. இந்நிலையில் பிரிவு 91 (1) மற்றும் 160 ஆகிய பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அழைக்க சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில், பாஜக உறுப்பினருக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் ராம. சீனிவாசன், மாநில IT பிரிவு தலைவர் நிர்மல் குமார், இளைஞர் அணி மாநில செயலாளர் சங்கரபாண்டி மற்றும் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த முக்கிய நபர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயலில் திமுக அரசாங்கமும், அமைச்சர் தியாகராஜனும் இறங்கி இருப்பது, தமிழகத்தில் பாசிச ஆட்சி நடைபெறுவதற்கான முன்னோட்டமோ என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், ஆட்சியில் இருப்பவர்கள் மீது விமர்சனங்கள் எழுவதும், எழுப்புவதும் வழக்கம் ஆனால் அவற்றிற்கு எல்லாம் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றால் இனி வரும் காலங்களில் தமிழகத்தில் பல ஆயிரம் வழக்குகள் பதிய வேண்டியிருக்கும்.
தொடர்ந்து திமுக நிர்வாகிகள் பாரத பிரதமர் குறித்தும், பாஜக அரசாங்கம் குறித்தும் அவதூறு பரப்பும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்த வண்ணம் உள்ளது அவர்கள் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது, தொடர்ந்து திமுகவிற்கு எதிர்க்கருத்து கொண்டவர்களை கைது செய்ய துடிக்கும் செயலை தமிழக அரசு நிறுத்தி கொள்ளவேண்டும் எனவும் இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு பாதுகாப்பற்ற சூழல் உண்டாகலாம் எனவும் பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருமாறன் ஜி மற்றும் பாஜக உறுப்பினர் கே. கே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் செயல் கருத்து சுதந்திரத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் கொடுக்கப்பட்ட சாவலாக பார்க்கப்படுகிறது.