Tamilnadu

#TN24EXCLUSIVE திட்டமிட்ட செயல் சிக்கிய நபர்? ஊடகங்களை தொடர்ந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் புகுந்தது எப்படி ?

media
media

தமிழக ஊடகங்களில் பெரியாரிஸ்ட் திராவிட சிந்தனையாளர்கள் பணியில் இருந்து கொண்டு ஒரு கட்சிக்கு ஆதரவாகவும் குறிப்பிட்ட சித்தாந்தத்தை திணிக்கும் வகையிலும் அவர்களுக்கு ஆதரவான நபர்களை பணியில் அமர்த்ததும் வகையில் செயல்பட்டு வந்ததாக குற்றசாட்டு எழுந்தது அதன் பிறகு பலரையும் பல ஊடகங்கள் வெளியேற்றின.


சிலர் தாங்களாக வெளியேறினர் இந்த சூழலில் ஊடகங்கள் மூலம் செயல்படுத்தபட்ட திட்டங்கள் முழுமையாக செயல்பட முடியாமல் போனது இந்த சூழலில்தான் பொழுது போக்கு ஊடகங்களை சிலர் தங்கள் சித்தாந்ததிற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது, அதாவது எவ்வாறு பா.ரஞ்சித் இன்னும் பிறர் திரைப்படங்களை தங்கள் அரசியல் ரீதியாக காட்சி படுத்துகின்றனரோ அதே போன்று சின்னத்திரை சேனல்களை தங்கள் திட்டத்திற்கு பயன்படுத்த சிலர் முயற்சி செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.


எழுந்த புகார்கள் உண்மை என்பது கடந்த இருநாட்களுக்கு முன்னர் ஜீ தமிழ் என்ற பொழுது போக்கு நிகழ்ச்சி மூலம் உறுதியானது, சிறுவர்களை கொண்டு திட்டமிட்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர், விமர்சனம் என்றால் கூட கருத்து சுதந்திரத்திற்கு கீழ் வரும் என்றால் பொய் தகவல்களை திட்டமிட்டு அந்த நிகழ்ச்சியில் பரப்பியது கடும் அதிர்ச்சிகளை உண்டாக்கியது.

இது எதேச்சையாக நடந்தது என சிலர் கூறி வரும் நிலையில் வீடியோவை  மதுரை எம்பி சு வெங்கடேசன் அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார் அதன் கீழே anbudan adhi என்ற நபர் எங்களது நிகழ்ச்சி வீடியோவை பகிர்ந்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார். இவர் தனது முகநூலில் ஜீ தமிழ் கன்டென்ட் ரைட்டர் என குறிப்பிட்டுள்ளார். இவரது முகநூலில் பாஜக மற்றும் அதிமுகவிற்கு வாக்கு அளிக்காதீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தீவிர இந்து மத எதிர்பாளராக தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார் இவர்கள் தான் சர்ச்சையான நிகழ்ச்சியை வழங்கி வருவதாக கூறப்படுகிறது, திட்டமிட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் தங்கள் சித்தாந்தத்தை பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது போன்று வேறு எங்கும் தவறுகள் நிகழ கூடாது எனவும் பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.