தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பாரத பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமரிடம் ஸ்டாலின் கொடுப்பார் என கூறப்படுகிறது.
முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் முதல் முறையாக பிரதமரை தமிழக அரசின் சார்பில் சந்திக்கவுள்ளார், இந்த சந்திப்பை தமிழகத்தை சேர்ந்த திமுக எம்பி டி.ஆர்.பாலு மேற்கொண்டு வருகிறார், பிரதமர் உடனான சந்திப்பின் போது பிரதமரிடம் 5 நிமிடம் தனியாக பேச ஸ்டாலின் விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமரை சந்திக்கும் ஸ்டாலின் பிரதமரிடம் என்ன மொழியில் பேசுவார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், இணைப்பாளர் இல்லாமல் ஸ்டாலினால் எப்படி பிரதமரிடம் தனது கருத்தை தெரிவிக்க முடியும், ஒரு வேலை இந்தி மொழியை எதிர்த்துவிட்டு தனது மகள் பள்ளியில் அதே இந்தி மொழியை கற்பிப்பது போன்று..
ஒரு வேலை பிரதமரிடம் பேச ஹிந்தி அல்லது குஜராத்தி மொழியை ஸ்டாலின் மனப்பாடம் செய்துவிட்டு செல்வாரா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி கலாய்த்து வருகின்றனர். ஸ்டாலினை வரவேற்று delhiwelcomesstalin என்ற ஹாஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய மிக பெரிய அளவில் திமுக ஐடி விங் பணத்தை இறைத்துள்ளதாம்.