Politics

#BREAKING கர்ணன் திரைப்படம் குறித்த மகனின் கருத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்டாலின்!!

#BREAKING கர்ணன் திரைப்படம் குறித்து கருத்து கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்டாலின்!!
#BREAKING கர்ணன் திரைப்படம் குறித்து கருத்து கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்டாலின்!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் குறித்து திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு :


‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ் அவர்கள், அண்ணன் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள், இயக்குநர் மாரி செல்வராஜ் என மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, ஏற்கனவே அசுரன் திரைப்படம் குறித்து உதயநிதி தந்தை ஸ்டாலின் கருத்து தெரிவித்தார், அந்த நேரத்தில் மூல பத்திரம் எங்கே எனவும் திமுக அலுவலகம் அமைந்துள்ள முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலம் தான் என எதிர்ப்பு குரல்கள் எழ அமைதியானார் ஸ்டாலின், பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முரசொலி இடம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் எனவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனு கொடுத்தார்.

அதன் பிறகு அமைதியானார் ஸ்டாலின், தற்போது திமுக இளைஞர் அணி தலைவர் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கர்ணன் திரைப்படத்தை சுட்டிக்காட்டி 1995 நடைபெற்ற கொடியங்குளம் சம்பவம் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது, அது திமுக ஆட்சியில் இல்லை என மாற்ற வேண்டும் என தெரிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின், ஆனால் 1997-ம் ஆண்டு தாமிரபரணி மாஞ்சோலை கலவரம் நடந்தது திமுக ஆட்சியில்தான் அதுகுறித்து உதய நிதியும் அவரது தந்தை ஸ்டாலினும் கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே அசுரன் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய ஸ்டாலின், தற்போது தனது மகன் மூலம் கர்ணன் திரைப்படம் வாயிலாகவும் எதிர்ப்பை சந்தித்துள்ளார், ட்விட்டரில் தற்குறி ஸ்டாலின் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து ட்ரெண்ட் செய்யும் அளவிற்கு தற்போது கர்ணன் விவகாரம் ஸ்டாலினுக்கு தலைவலியை உண்டாக்கியுள்ளது.