தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக கூறி தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அவற்றில் ஒன்றாக வழிபாட்டு தளங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, இந்த சூழலில் இந்து கோவிலை நம்பி வியாபாரம் செய்துவரும் வியாபாரிகள், ஆன்மிக வாதிகள், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் பரப்புரைக்கு தடை விதிக்காத அரசாங்கம் கோவில் திருவிழாவிற்கு தடை விதிப்பது எப்படி நியாயமாகும், தேர்தல் நேரத்தில் பரவாத கொரோனா கோவில் திருவிழாகளின் போது பரவ போகிறதா தொடர்ந்து கோவில்களுக்கு எதிராக திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பக்தர்கள் கொந்தாளிப்படைந்து உள்ளனர்.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த பெண்கள், உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழாவை நடத்த வேண்டும் என போராட்டத்தில் இறங்கியுள்ளனர், தேர்தல் நேரத்தில் கட்டுப்பாடு இல்லாமல் பிரச்சாரம் செய்துவிட்டு தற்போது வந்து தங்களிடம் கோவில் திருவிழாவை தடை செய்கிறோம் என கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என கொந்தளித்து போய் பேசுகின்றனர்.
அவர்களின் பேச்சில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, ஒரு வருடம் கோவில் திருவிழாவை நிறுத்தியதற்கே தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் பெண்கள் ஆகியோரிடம், கோவில்கள் குறித்தும் இந்து கடவுள்கள் குறித்தும் பெரியாரிஸ்ட்கள் பேசிய பேச்சுக்களை கிராமம் கிராமமாக கோவில் திருவிழாக்களின் போது கொண்டு சென்றால்..
பெரியாரிஸ்ட்கள் நிலை என்ன ஆகும் என்பதை யோசித்து பார்ப்பதே கடினமாக உள்ளது, இந்த தேர்தலில் 10% மக்கள் விழிப்பு அடைந்ததற்கே, திமுக தேர்தல் பிரச்சாரத்தில் பெரியாரிஸ்ட்கள், குறிப்பாக வீரமணி சுபவீ, திருமுருகன் காந்தி இன்னும் இரண்டாம் கட்ட பேச்சாளர்கள் என பலரையும் கடந்த 2016ம் ஆண்டு பொது தேர்தலில் பயன்படுத்தியதில் ஒப்பிடுகையில் 1% அளவிற்கு கூட பயன்படுத்தாமல் பெரியாரிஸ்ட்களை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.