தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பது, பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தொடர்ந்து இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம் திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை புறக்கணிப்பதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கொரோனா விதிமுறைகளையும் அண்டை மாநிலமான கேரளாவையும் ஒப்பிட்டு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது, இதற்கு பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக சார்பில் ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தியை புறக்கணிப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பி அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி வருகின்றனர், இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தடை குறித்த விவாதம் தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்றது.
இதில் பெரியாரிஸ்ட், சுபவீ கலந்துகொண்டு மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் மட்டுமே விநாயகர் ஜெயந்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்து இருப்பதாக தெரிவித்தார், மேலும் நெறியாளராக இருந்த தம்பி தமிழரசணும் இதே கேள்வியை ஸ்ரீனிவாசன் என்பவரிடம் கேட்டார்.
அதற்கு ஸ்ரீனிவாசன் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது, தியேட்டர்கள், மால்கள், பார் திறந்து இருக்கும் போது கொரோனா பரவாதா? மூடிய அறையில் கொரோனா பரவும் வாய்ப்புகள் அதிகமா திறந்த இடத்தில் விநாயகர் ஊர்வலம் பிரதிஷ்டை செய்வது கொரோனவை பரப்புமா?
பஸ் ட்ரெயின் உள்ளிட்ட போக்குவரத்து பயன்பாட்டில் சமூக இடைவெளி பின்பற்ற படுகிறதா? ஏன் அதற்கு அனுமதி அளித்திருக்கிறார்கள், விநாயகர் ஜெயந்திக்கு அனுமதி அளிக்கவில்லை என கேள்வி எழுப்ப பதில் சொல்லமுடியாமல் இருவரும் அமைதியாகிவிட்டனர், ஒரு கட்டத்தில் தம்பி தமிழரசன் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு அனுமதி அளித்ததே அங்கு கொரோனா பரவ காரணம் என அம்மாநில அரசு கூறுகிறதே அது போல் தமிழகத்தில் நடக்காதா எனவும் கேள்வி எழுப்பினார்.
முதலில் கேரளாவில் என்றைக்கு கொரோனா குறைவாக இருந்தது என கூறுங்கள் எப்போதும் கொரோனா பரவலில் நாட்டில் முதல் இரண்டாவது இடத்தில் கேரளா இருக்கிறது, அங்கு நிர்வாகம் சரியில்லை, கேரளா மாடலே ஒரு தோல்வி அடைந்த மாடல் என விளாசி விட்டார், விவாதத்தில் புதுமுகமாக தெரிந்தாலும் அவரது கேள்விகள் பதில்கள் ஒவ்வொன்றும் நெறியாளரை எச்சி முழுங்க வைத்துவிட்டது என்றே கூறலாம்.
திரையரங்குகள் திறக்கலாம், சாராய கடைகள் திறக்கலாம் ஆனால் கடவுளை வழிபட கூடாதா என்ன ஒரு நியாயம் என பலரும் இப்போது திமுக அரசாங்கத்தை கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.